பொள்ளாச்சி அருகே சரக்கு ஆட்டோ உரிமையாளர் கொலை: மூன்று பேர் கைது

பொள்ளாச்சி அருகே சரக்கு ஆட்டோ உரிமையாளர் பிரபாகரன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கோவை போலீசார் விசாரணையில் இளஞ்சிறார் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.


Coimbatore: கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே சரக்கு ஆட்டோ உரிமையாளர் பிரபாகரன் (32) வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இளஞ்சிறார் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை சுந்தராபுரம், மதுக்கரை மார்க்கெட் ரோடு, சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த ராஜாவின் மகன் பிரபாகரன் (32) சொந்தமாக சரக்கு ஆட்டோ வாங்கி ஓட்டி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன், அடையாளம் தெரியாத நபர்கள் பிரபாகரனிடம் வாடகைக்கு ஆட்டோ வேண்டும் என்று அழைத்துச் சென்றனர். செட்டிப்பாளையம் வடசித்தூர் சாலையில், பனப்பட்டி பிரிவு அருகே ஆட்டோ சென்றபோது, திடீரென பிரபாகரனை வெட்டிக் கொலை செய்துவிட்டு தலைமறைவானார்கள்.



இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த நெகமம் போலீசார், மோப்ப நாய் மற்றும் தடய நிபுணர்களின் உதவியுடன் 5 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர். விசாரணையில், கோவை போத்தனூர் பகுதியைச் சேர்ந்த பிரபாகரனின் தங்கையின் கணவரான சாதிக் பாஷா (36) கைது செய்யப்பட்டார்.

விசாரணையில், சாதிக் பாஷா வேறொரு பெண்ணை திருமணம் செய்வதற்கு பிரபாகரன் தடையாக இருந்ததால், அவரைக் கொலை செய்ய திட்டமிட்டதாக தெரியவந்தது. இதற்காக தனது நண்பர் மணிகண்டன் (24) மற்றும் ஒரு இளஞ்சிறார் ஆகியோரின் உதவியுடன் கொலை செய்ததாக சாதிக் பாஷா வாக்குமூலம் அளித்தார்.

இதையடுத்து, சாதிக் பாஷா, மணிகண்டன் மற்றும் இளஞ்சிறார் ஆகிய மூவர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்து நீதிமன்றக் காவலுக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

Newsletter

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...