பொள்ளாச்சி: குடிநீர் பிரச்சினையால் பொதுமக்கள் சாலை மறியல்

பொள்ளாச்சி அருகே அங்கலக்குறிச்சியில் 15 நாட்களாக குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் தலையீட்டால் பிரச்சினை தீர்க்கப்பட்டது.


கோவை: பொள்ளாச்சியை அடுத்த அங்கலக்குறிச்சி கைகாட்டி பகுதியில் பொள்ளாச்சி வால்பாறை பிரதான சாலையில், 15 நாட்களாக குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஆனைமலை அடுத்த அங்கலக்குறிச்சி பகுதியில் உள்ள முல்லை நகர் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 15 நாட்களாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.



இது குறித்து அங்கலக்குறிச்சி திமுக ஊராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் நேற்று இரவு முல்லை நகர் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்டோர் பொள்ளாச்சி வால்பாறை பிரதான சாலையில் உள்ள கைகாட்டி பகுதியில் காலி குடங்களுடன் இன்று மாலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.



இது குறித்து அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உள்ளிட்ட அதிகாரிகள் முறையாக தண்ணீர் விநியோகிக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் பொள்ளாச்சி வால்பாறை சாலையில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...