கோவை பெரிய கடை வீதியில் காவல் அதிகாரிக்கு கொலை மிரட்டல்: இருவர் கைது

கோவை பெரிய கடை வீதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் முருகேசனுக்கு கொலை மிரட்டல் விடுத்த இருவர் கைது செய்யப்பட்டனர். சம்பவம் ஜூலை 10 அன்று நடந்தது.


கோவை: கோவை கடைவீதி காவல் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணிபுரியும் முருகேசன், ஜூலை 10 அன்று பெரிய கடை வீதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பொது இடத்தில் தகராறு செய்து கொண்டிருந்த இருவரை அவர் கண்டித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த இருவரும், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் முருகேசனை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, கொலை மிரட்டலும் விடுத்தனர். இது தொடர்பாக கடைவீதி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் அடிப்படையில், சப்-இன்ஸ்பெக்டர் காளிதாஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். அங்கு தகராறில் ஈடுபட்டிருந்த தெற்கு உக்கடம் ஜி.எம்.நகரை சேர்ந்த சர்தார் (வயது 33) மற்றும் தில்லை நகரை சேர்ந்த அந்தோணி ஜெகன் மனைவி மேரி (வயது 40) ஆகியோரை கைது செய்தார்.

கைது செய்யப்பட்ட இருவர் மீதும் அரசு ஊழியரை பணி செய்ய விடாது தடுத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Newsletter

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...