தொண்டாமுத்தூர் அருகே சிறுத்தை தாக்குதல்: இரண்டு ஆடுகள் பலி, வனத்துறை கண்காணிப்பு

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே சிறுத்தை தாக்குதலில் இரண்டு ஆடுகள் உயிரிழந்தன. வனத்துறையினர் கேமரா பொருத்தி கண்காணிப்பு மேற்கொண்டுள்ளனர். விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அருகே உள்ள வண்டிக்காரனூரில் சிறுத்தை தாக்குதலில் இரண்டு ஆடுகள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று இரவு, வண்டிக்காரனூர் பகுதியில் உள்ள ஒரு விவசாயியின் தோட்டத்திற்குள் சிறுத்தை ஒன்று புகுந்து, இரண்டு ஆடுகளைக் கொன்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், அப்பகுதியில் உள்ள விவசாயிகள் வனத்துறையினரிடம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, வனத்துறையினர் இன்று (ஜூலை 11) சம்பவம் நடந்த இடத்திற்கு வருகை தந்துள்ளனர்.

வனத்துறையினர், பாதிக்கப்பட்ட விவசாயியின் வீட்டு ஆட்டுக் கொட்டகையில் கேமராக்களைப் பொருத்தி, சிறுத்தையின் நடமாட்டத்தைக் கண்காணித்து வருகின்றனர். மேலும், அப்பகுதியில் தொடர்ந்து ரோந்து பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...