அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள அமராவதி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான பாம்பாறு, தூவானம், காந்தளூர், மறையூர் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அமராவதி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தற்போது அமராவதி அணைக்கு வினாடிக்கு 6,344 கன அடி நீர்வரத்து உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 90 அடி ஆகும். தற்போதைய நீர்மட்டம் 84.30 அடியாக உள்ளது. அமராவதி நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அணையில் இருந்து எந்நேரமும் உபரி நீர் வெளியேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



இந்நிலையில், பொதுப்பணித்துறை சார்பில் கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கல்லாபுரம், ரூத்ரா பாளையம், கொழூமம், மடத்துக்குளம், காரத்தொழுவு உள்ளிட்ட கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறும், அதிகாரிகளின் அறிவுரைகளை பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...