வன உயிரினங்கள் உயிரிழப்பை தடுக்க மாவட்ட அளவிலான ஆலோசனைக் குழுக் கூட்டம்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் வெடிபொருள், மின்சாரம் காரணமாக வன உயிரினங்கள் உயிரிழப்பதை தடுக்க மாவட்ட அளவிலான ஆலோசனைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி தலைமையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.


கோவை: கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் வன உயிரினங்கள் வெடிபொருள்/அவுட்டுக்காய் மற்றும் மின்சாரம் தாக்கி உயிரிழக்கும் நிகழ்வுகளைத் தடுக்க மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்த மாவட்ட அளவிலான குழுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி தலைமையில் ஜூலை 22 அன்று நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் மற்றும் விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



கோவை வனக்கோட்டத்திற்குட்பட்ட வனச்சரகங்களில் வனக்களப்பணியாளர்கள் மற்றும் மின்வாரிய பணியாளர்களுடன் இணைந்து தொடர்ச்சியாக வனங்களை ஒட்டி உள்ள பகுதியில் கூட்டுத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த தணிக்கையின் போது தாழ்வாக உள்ள மின் கம்பிகள் மற்றும் சாய்வான சேதமடைந்த மின்கம்பிகள் கண்டறியப்பட்டு உடனடியாக சரி செய்யப்பட்டுள்ளன.



கடந்த ஏப்ரல் 2023 முதல் ஜூன் 2024 வரை சுமார் 2000 எண்ணிக்கையிலான தாழ்வான மின் கம்பிகள் மற்றும் சேதமடைந்த சாய்வான மின்கம்பங்கள் கண்டறியப்பட்டு சரி செய்யப்பட்டுள்ளன. மேலும், முற்றிலும் சேதமடைந்த மின்கம்பங்களை மாற்றி அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வனங்களை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் உள்ள மின்வேலிகளையும் மின்வாரிய பணியாளர்களுடன் ஆய்வு செய்து, அனுமதிக்கப்பட்ட அளவிலான மின்னழுத்தம் பயன்படுத்தப்படுகிறதா என்பதும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.



கோவை வனக்கோட்டத்திற்குட்பட்ட வனச்சரகங்களில் வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் அவுட்டுக்காய் (நாட்டு வெடி) பயன்படுத்தி வனஉயிரினங்கள் வேட்டையாடுவதைத் தவிர்க்க காவல் துறையுடன் இணைந்து தொடர் களத்தணிக்கை மேற்கொள்ளப்படுகிறது. கடந்த ஓராண்டில் அவுட்டுக்காய் பயன்படுத்தி வேட்டையாடிய குற்றத்திற்காக 6 வனக்குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவுட்டுக்காய் பயன்படுத்தியதற்காக வெடிபொருள் கையாண்ட குற்றத்திற்காக காவல் துறை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, மாவட்ட தீயணைப்பு மற்றும் தொழிற்துறை பாதுகாப்பு குழுக்கூட்டமும் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தீ மற்றும் தொழில்துறை பாதுகாப்பு தொடர்பான நிலையான செயல்பாட்டு நடைமுறையின் அமலாக்கத்தைக் கண்காணிக்கவும், தீ விபத்துகளைத் தடுப்பது குறித்து உரிமம் வைத்திருப்பவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தீ விபத்துகளைத் தடுப்பதற்கும் தணிப்பதற்கும் சமூகப் பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தவும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி அறிவுறுத்தினார்.

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...