டாஸ்மாக் ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்: பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைப்பு

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பணி நிரந்தரம், ஓய்வு வயது உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடைபெற்றது.


Coimbatore: கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் (சிஐடியு) கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். 21 ஆண்டுகளாக அத்து கூலிகளாக பணியாற்றி வரும் டாஸ்மாக் ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கைகளில் தமிழக முதல்வர் நேரடியாக தலையிட வேண்டும் என்பதே இந்த ஆர்ப்பாட்டத்தின் நோக்கமாகும்.

ஆர்ப்பாட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளன (சிஐடியு) பொதுச் செயலாளர் திருச்செல்வன், "டாஸ்மாக் ஊழியர்களின் பணி நிரந்தரம் குறித்த பிரதான கோரிக்கை இரு ஆட்சியாளர்களாலும் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. 1981 ஆம் ஆண்டு தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட பணி நிரந்தர தகுதி வழங்கள் சட்டத்தை தற்போது தமிழக அரசே அவமதித்து வருகிறது," என்று குற்றம் சாட்டினார்.



மேலும் அவர், "டாஸ்மாக்கில் பணியாற்றக் கூடிய நிரந்தர ஊழியர்களுக்கு 60 வயது ஓய்வு வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடை ஊழியர்களுக்கு 58 வயதை ஓய்வு வயதாக அறிவித்து, அவர்கள் எந்தவித சட்ட சலுகையும் இல்லாமல் பணியிலிருந்து வெளியேற்றப்படும் சூழலை ஆட்சியாளர்கள் உருவாக்கி இருக்கிறார்கள்," என்று கூறினார்.

திருச்செல்வன் தொடர்ந்து பேசுகையில், "டாஸ்மாக் நிறுவனம் 136 கோடி இழப்பு என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால் கடைகளில் உள்ள மதுபானங்களையும் கிடங்கில் உள்ள மதுபானங்களையும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் 5000 கோடிக்கு அடமானம் வைத்துள்ளது. அதிக வருமானம் ஈட்டக்கூடிய டாஸ்மாக் நிறுவனம் நஷ்டக் கணக்கு காட்டி, தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சட்டப் பலன்களை தர மறுத்துக் கொண்டிருக்கிறது," என்றார்.



"தற்போது டாஸ்மாக் கடைகளை மூடுகின்ற ஏற்பாடாக, 581 மனமகிழ் மன்றங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இந்த மன்றங்களில் நிபந்தனைகளுக்கு மாறாக பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். திட்டமிட்டு அரசுக்கு வர வேண்டிய வருவாயை, தனியார் ஆதிக்கத்திற்கு செல்லும் ஏற்பாட்டை இந்த அரசு செய்துள்ளது," என்று திருச்செல்வன் குற்றம் சாட்டினார்.

கள்ளச்சாராய விற்பனை தொடர்பாகவும் அவர் கருத்து தெரிவித்தார். "கள்ளச்சாராயம் காட்சி விற்பவர்களை விட்டுவிட்டு சட்டத்திற்கு புறம்பாக மது விற்பவர்களை கைது செய்கிறோம் என்ற பெயரில் காவல்துறை செயல்பட்டு வருகிறது. டாஸ்மாக் கடை ஊழியர்கள் மீது வழக்கு போடுவது ஏற்புடையதல்ல," என்று அவர் கூறினார்.

இறுதியாக, "எங்கள் கோரிக்கைகள் குறித்து அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம். அமைச்சர் அதன் மீதுள்ள நியாயத்தை ஏற்றுக்கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்றுவார் என்று நம்புகிறோம்," என்று திருச்செல்வன் தெரிவித்தார்.

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...