கோவையில் திமுக உறுப்பினர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன

கோவை மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் புதிய கழக உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார். இந்நிகழ்வு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவின் பேரில் நடைபெற்றது.


கோவை: கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் இன்று (ஜூலை 25) புதிய கழக உறுப்பினர்களுக்கான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் இந்த அட்டைகளை வழங்கினார்.

முதலமைச்சர் ஸ்டாலினின் உத்தரவின் பேரில், முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு மற்றும் கழகத்தின் பவள விழா ஆண்டை முன்னிட்டு இந்த அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.



புதிய கழக உறுப்பினர் படிவத்தை பூர்த்தி செய்து தலைமைக்குக் கொடுத்தவர்களுக்கு இந்த அட்டைகள் வழங்கப்பட்டன.



கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி, பெரிய கடைவீதி பகுதி-2, காந்திபுரம் பகுதி ஆகிய இடங்களைச் சேர்ந்த வட்டக்கழகச் செயலாளர்கள் நா.தங்கவேல், ஏ.அப்பாஸ், விஜயகுமார், கே.ராமநாதன், எஸ்.போஸ் ஆகியோருக்கு இந்த அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.



காந்திபுரம் பகுதிச் செயலாளர் ஆர்.எம்.சேதுராமன், பெரியகடை வீதி பகுதி-2 செயலாளர் வி.ஐ.பதுருதீன் ஆகியோர் இந்நிகழ்வில் முன்னிலை வகித்தனர். மேலும், பெரிய கடைவீதி பகுதி-2, காந்திபுரம் பகுதிக்கழக, வட்டக்கழக அனைத்து நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள், கழக செயல்வீரர்கள், BLA-2 பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...