கோவை சரவணம்பட்டியில் அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பு: கடைகள் கட்டி வாடகை வசூல் செய்த அதிர்ச்சி தகவல்

கோவை சரவணம்பட்டியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கடைகள் கட்டி வாடகை வசூலித்த சம்பவம் அம்பலமானது. மாவட்ட ஆட்சியர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.


கோவை: கோவை மாவட்டம் சரவணம்பட்டியில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் சில நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து கடைகள் கட்டி வாடகை வசூல் செய்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியருக்கு அளிக்கப்பட்ட மனுவின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட இடங்களில் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.



மேலும், அரசு நியாயவிலை கடைக்கு வாடகைக்கு விடப்பட்டு, அரசிடம் இருந்தே வாடகை வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த அதிர்ச்சி தகவலை அடுத்து, மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஆக்கிரமிப்பு குறித்து விரிவான விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், அந்த இடத்தில் வேறு ஏதேனும் ஆக்கிரமிப்புகள் இருப்பின், அவற்றையும் உடனடியாக அகற்றுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

Newsletter

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...