கோவை வழியாக கேரளா-பெங்களூருக்கு வந்தே பாரத் சிறப்பு ரயில் சேவை அறிவிப்பு

எர்ணாகுளம்-பெங்களூரு இடையே ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 26 வரை சிறப்பு வந்தே பாரத் ரயில் சேவை. கோவை, சேலம் வழியாக செல்லும் இந்த ரயில் வாரத்தில் மூன்று நாட்கள் இயக்கப்படும்.


கோவை: எர்ணாகுளத்தில் இருந்து பெங்களூருக்கு சிறப்பு வந்தே பாரத் ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் இந்த சிறப்பு ரயில் சேவையை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

ஜூலை 31ம் தேதி முதல் ஆகஸ்ட் 26ம் தேதி வரை இந்த சிறப்பு வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்பட உள்ளது. எர்ணாகுளம்-பெங்களூரு இடையே புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் இந்த ரயில் இயக்கப்படும். எர்ணாகுளத்தில் பகல் 12.50 மணிக்குப் புறப்படும் இந்த ரயில் போத்தனூர் ரயில் நிலையத்தில் மாலை 4.13-4.15 வரை நின்று செல்லும். சேலத்திற்கு மாலை 6.33க்கு சென்றடையும். பெங்களூரு கண்டோன்மென்டுக்கு இரவு 10 மணிக்கு சென்றடையும்.

திரும்பும் பயணத்தில், பெங்களூரு - எர்ணாகுளம் இடையே செவ்வாய், சனி மற்றும் திங்கட்கிழமைகளில் மட்டும் இந்த சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. பெங்களூரில் காலை 5.30க்கு புறப்படும் இந்த ரயில் சேலத்திற்கு காலை 8.58க்கும், ஈரோட்டிற்கு காலை 9.50க்கும், திருப்பூருக்கு 10.33க்கும், போத்தனூருக்கு 11.15க்கும் வந்து எர்ணாகுளத்திற்கு மதியம் 2.20க்கு சென்றடையும்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...