பொள்ளாச்சியில் லாரி மோதி இரு இளைஞர்கள் பரிதாப உயிரிழப்பு

பொள்ளாச்சி உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Coimbatore: பொள்ளாச்சி உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மின் நகர் பகுதியில் நேற்று மாலை பரிதாபமான விபத்து ஒன்று நடந்தது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்து நடந்த நேரத்தில், அரசு பேருந்து ஒன்று பயணிகளை இறக்கி விட்டுக் கொண்டிருந்தது. பேருந்து நின்று கொண்டிருந்ததால், பேருந்தின் பின்புறமாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் பேருந்தை முந்தி செல்ல முயன்றனர். அப்போது பின்னால் வந்த லாரி இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். லாரியின் சக்கரங்கள் இருவர் மீதும் ஏறியதில் அவர்களின் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.



உயிரிழந்த இருவரும் பொள்ளாச்சி அருகே உள்ள பூசாரிபட்டியைச் சேர்ந்த கவி பிரகாஷ் (வயது 20) மற்றும் ஜெயபிரகாஷ் (வயது 24) என்பது தெரிய வந்தது. இருவரும் தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளனர். வேலை முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த நிலையில் இந்த பரிதாப விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த கிழக்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரை கைது செய்த போலீசார், விபத்து குறித்து விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...