வால்பாறையில் கனமழை: மண்சரிவு ஏற்பட்டு குடியிருப்பின் மீது விழுந்ததில் பாட்டி-பேத்தி பரிதாப உயிரிழப்பு

வால்பாறை சோலையார் அணைப்பகுதியில் கனமழையால் மண்சரிவு ஏற்பட்டு, குடியிருப்பின் மீது விழுந்ததில் பாட்டி-பேத்தி உயிரிழந்தனர். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.


Coimbatore: வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சோலையார் அணைப்பகுதியில் நேற்றிரவு ஏற்பட்ட மண்சரிவில் பாட்டி-பேத்தி பரிதாபமாக உயிரிழந்தனர்.

வால்பாறை அருகே உள்ள சோலையார் அணைப்பகுதியில் 'இடது கரை' என்ற இடத்தில் ராஜேஸ்வரி (வயது 42) மற்றும் அவரது பேத்தி ஜனனபிரியா (வயது 14) ஆகியோர் தங்களது குடியிருப்பில் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது இரவு பெய்த கனமழையால் அருகில் இருந்த மண் குன்று இடிந்து குடியிருப்பின் மீது விழுந்தது.



இந்த சம்பவத்தில் குடியிருப்பு சேதமடைந்ததோடு, தூங்கிக் கொண்டிருந்த ராஜேஸ்வரி மற்றும் ஜனனபிரியா மீது கற்கள் விழுந்து இருவரும் உயிரிழந்தனர். காலையில் அருகில் உள்ளவர்கள் இதனை கண்டு காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினரும் பொதுமக்களும் இணைந்து கற்களை அகற்றி இருவரின் உடல்களையும் மீட்டனர்.

மீட்கப்பட்ட உடல்கள் பிரேத பரிசோதனைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...

கோவையில் பருவமழை புகார்களுக்கு சிறப்பு எண்கள்: மாநகராட்சி அறிவிப்பு

மழைநீர் தேக்கம், மரம் விழுதல் உள்ளிட்ட அவசர நிலைகள் தொடர்பாக பொதுமக்கள் 81900 00200 என்ற வாட்ஸ் ஆப் எண் மற்றும் மண்டல வா...

தென்மேற்கு பருவமழை: கோவையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்

தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேக்கம் மற்றும் வெள்ள பாதிப்புகளைத் தவிர்க்க...

சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தீவிர விசாரணைக்குப்...