தொடர் மழையால் சிறுவாணி அணையில் இருந்து மீண்டும் தண்ணீர் திறப்பு

கோவையின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையில், தொடர் மழையால் நீர்மட்டம் உயர்ந்ததால் கேரளா அதிகாரிகள் மதகுகள் வழியாக தண்ணீரை வெளியேற்றினர். மாநகராட்சி அதிகாரிகள் நிலைமையை கண்காணித்து வருகின்றனர்.


Coimbatore: கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையில் இருந்து கேரளா அதிகாரிகள் மீண்டும் தண்ணீரை திறந்து விட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் அமைந்துள்ள இந்த அணையில், தொடர் மழையால் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் அணையின் நீர்மட்டம் 42 அடியாக உயர்ந்தபோது, கேரளா அதிகாரிகள் முன் அறிவிப்பின்றி தண்ணீரை திறந்து விட்டனர். இதையடுத்து, கோவை மாநகராட்சி ஆணையர் M. சிவகுரு பிரபாகரன் மற்றும் அதிகாரிகள் அணைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். கேரளா அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் மூலம், அணையில் 44.64 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க உடன்பாடு எட்டப்பட்டது.



ஆனால், நேற்று முன்தினம் முதல் சிறுவாணி அணை நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்ததால், அணைக்கு நீர்வரத்து பெருமளவில் அதிகரித்தது. இதன் காரணமாக, கேரளா அதிகாரிகள் மதகுகள் வழியாக தண்ணீரை வெளியேற்றத் தொடங்கினர்.

மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறுகையில், "ஜூலை 30 அன்று சிறுவாணி அணை பகுதியில் 162 மிල்லிமீட்டர் மழையும், அடிவாரத்தில் 85 மில்லிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தற்போது சில மணி நேரத்திற்கு மட்டுமே கேரளா அதிகாரிகள் அணையிலிருந்து தண்ணீரை திறந்து விட்டுள்ளனர்" என்று தெரிவித்தனர்.

கோவை மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு, மாநகராட்சி அதிகாரிகள் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகின்றனர். மேலும் கேரளா அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்து, அணையின் நீர்மட்டத்தை பாதுகாப்பான அளவில் பராமரிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Newsletter

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியீடு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் பதிவு எண் மற்றும்...

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...