கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரயில் நிலையம் முன்பு SFI, DYFI, AIYF, AISF உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Coimbatore: நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை (NTA) கலைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இடதுசாரி மாணவர் மற்றும் இளைஞர் அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



அண்மையில் நடைபெற்ற நீட் தேர்வின் போது ராஜஸ்தானில் வினாத்தாள் கசிந்ததாக வெளியான தகவல் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் மாணவர் அமைப்புகள் நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து கண்டனங்களை பதிவு செய்து வருகின்றன.



அதன் தொடர்ச்சியாக இன்று கோவை ரயில் நிலையம் முன்பு SFI, DYFI, AISF, AIYF உள்ளிட்ட இடதுசாரி மாணவர் மற்றும் இளைஞர் அமைப்புகள் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் DYFI மாவட்ட செயலாளர் தினேஷ் மற்றும் AIYF மாவட்ட தலைவர் அபிமன்யு உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, “நீட் தேர்வை ரத்து செய்”, “தேசிய தேர்வு முகமையை கலைத்திடு”, “12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்திடு” உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

மேலும், நீட் தேர்வு முறையே வணிகமாக மாறிவிட்டதாகவும், பல லட்ச ரூபாய்க்கு வினாத்தாள்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றம் சாட்டினர். வினாத்தாள் கசிவை தேசிய தேர்வு முகமை ஒப்புக்கொண்டுள்ள நிலையில், அந்த அமைப்பை உடனடியாக கலைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...