கோவை வனக்கல்லூரியில் பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார மேம்பாட்டு கருத்தரங்கம்

கோவை வனக்கல்லூரியில் ஜூலை 30, 31 ஆகிய தேதிகளில் பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார மேம்பாடு குறித்த இரண்டு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் இந்திய-ஜப்பானிய கூட்டுறவு, வனத்துறை முன்னேற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.


Coimbatore: கோவை வனக்கல்லூரி வளாகத்தில், பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார மேம்பாடு குறித்த இரண்டு நாள் கருத்தரங்கம் ஜூலை 30 ஆம் தேதி தொடங்கியது. இந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக புது தில்லியில் உள்ள ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமையின் இந்திய அலுவலக மேம்பாட்டுப் பிரிவு நிபுணர் சித்தார்த் பரமேஸ்வரன் பங்கேற்றார்.


சித்தார்த் பரமேஸ்வரன் தனது உரையில், தமிழகத்தில் காடுகள் வளர்ப்புத் திட்டம், பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பசுமை திட்டங்களுக்காக ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை நான்கு கட்டங்களாக நிதியுதவி செய்து வருவதாகக் கூறினார். மேலும், தனியார் நிலங்களில் சுமார் 1.43 லட்சம் ஹெக்டேரில் காடுகள் வளர்க்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் சுமார் 87 ஆயிரம் விவசாயிகள் பயனடைந்துள்ளதாகவும் தெரிவித்தார். அறிவியல் ஆராய்ச்சியில் இந்திய-ஜப்பானிய ஆராய்ச்சி மையங்கள் இணைந்து செயல்படுவது இரு நாட்டு உறவில் புதிய சகாப்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


தமிழக அரசின் வனத்துறை செயலர் செந்தில்குமார், பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார மேம்பாடு குறித்தும், வனத்துறையின் பல்வேறு பயன்பாடுகளுக்கு செயற்கைக்கோள் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருவதைக் குறித்தும் விளக்கினார்.


மனித-விலங்கு மோதல் குறித்த ஆய்வு தொடர்பாக சென்னையைச் சேர்ந்த கோர் எர்த் டிரஸ்ட் அமைப்பின் கள அலுவலர் தானீஷ் பாஸ்கர் உரையாற்றினார். இலங்கையைச் சேர்ந்த ஸ்ரீதர் விஜய்கிருஷ்ணன், இந்திய அறிவியல் மையத்தின் நிஷாந்த் சீனிவாசன் ஆகியோர் பல்வேறு மனித-விலங்கு மோதல்கள் குறித்த ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்து பேசினர்.


இக்கருத்தரங்கில், ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமையின் முதுநிலை நிர்வாகி வகாமட்சு இஜி, தமிழக வனத்துறை முதன்மை தலைமை வனக் காப்பாளர் ஸ்ரீனிவாச ரெட்டி, முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் (வனத்துறை சிறப்பு படைப் பிரிவு) சுதான்சு குப்தா, கோவை மண்டல வனப் பாதுகாவலர் ராமசுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றனர்.


தமிழக பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பசுமை காலநிலை மாற்ற இயக்கத்தின் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் அன்வர்தீன் வரவேற்புரை நிகழ்த்தினார். இந்தக் கருத்தரங்கம் ஜூலை 31 ஆம் தேதி நிறைவடைந்தது.

Newsletter

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியீடு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் பதிவு எண் மற்றும்...

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...