கோவையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த கடத்தல் குற்றவாளி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

கோவையில் ஜோசியம் பார்ப்பதாகக் கூறி கடத்தல் மற்றும் மோசடி செய்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த பினீஷ்குமார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி உத்தரவின் பேரில், கேரள மாநிலத்தைச் சேர்ந்த கடத்தல் குற்றவாளி பினீஷ்குமார் (45) குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜூலை 31 அன்று கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

பினீஷ்குமார், கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த செந்தில்குமாருக்கு (48) ஜோசியம் பார்ப்பதாகக் கூறி கடத்திச் சென்று மோசடி செய்த குற்றத்திற்காக நெகமம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இவர் ஏற்கெனவே பல குற்றச் செயல்களில் ஈடுபட்டதும், தொடர்ந்து பொது அமைதிக்கும் சட்ட ஒழுங்குக்கும் பாதகமான செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.பத்ரிநாராயணன் பரிந்துரை செய்தார்.

இந்தப் பரிந்துரையின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, பினீஷ்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவின் பேரில் பினீஷ்குமார் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...

கோவை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடுகளை உடனே சரிசெய்ய வேண்டும் - சிபிஐ(எம்) மனு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவறை பராமரிப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாக எழும் சுகாதார குறைபாடுகளை போ...

பீளமேடு வார்டு 27-ல் மரக்கிளை வெட்டு பணியும் தூய்மை ஆய்வும் - கவுன்சிலர் அம்பிகா தனபால்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டு...

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...

பரளிக்காடு சூழல் சுற்றுலா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்தில் உள்ள பில்லூர் அணையின் பரளிக்காடு சூழல் சுற்றுலா கனமழை எச்சரிக்கை காரணமாக ஒரு வாரமாக ந...