போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC, ஸ்கேனர் பரிசோதனை உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகளை கட்டாயமாக பின்பற்ற காவல் ஆணையர் அறிவுறுத்தினார்.


Coimbatore: கோவை மாநகர காவல் துறை சார்பில், மாநகர பகுதிகளில் வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு பார்சல் டெலிவரி செய்யும் கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் இன்று (19.05.2026) ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டம் கோவை மாநகர காவல் ஆணையர் என். கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் வடக்கு மற்றும் தெற்கு காவல் துணை ஆணையர்கள் மற்றும் மாநகரில் செயல்பட்டு வரும் 115 கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய காவல் ஆணையர், பார்சல் சேவைகள் மூலம் போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோத பொருட்கள் பரிமாற்றம் மற்றும் இணையவழி மோசடிகள் அதிகரித்து வருவதால், நிறுவனங்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பார்சல்கள் பெறப்படும் மற்றும் சேமிக்கப்படும் இடங்களில் கட்டாயமாக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்றும், அவற்றின் பதிவுகள் குறைந்தது 30 நாட்கள் பராமரிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. மேலும், அனுப்பப்படும் மற்றும் டெலிவரி செய்யப்படும் அனைத்து பார்சல்களும் முறையான பதிவேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.



பார்சல் அனுப்பும் மற்றும் பெறும் நபர்களின் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, கைபேசி எண் உள்ளிட்ட முழுமையான KYC விவரங்கள் கட்டாயமாக பெறப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டது.

சந்தேகத்திற்கிடமான பார்சல்கள், போலி முகவரிகள், தவறான கைபேசி எண்கள் அல்லது சந்தேகமான நடத்தை கொண்ட நபர்கள் குறித்து உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. குறிப்பாக போதைப்பொருள் மற்றும் கடத்தல் பொருட்களை தவறான முகவரிகள் மற்றும் செல்போன் எண்கள் மூலம் பெறும் நபர்களை கண்காணிக்க வேண்டியது அவசியம் என தெரிவிக்கப்பட்டது.

மேலும், Stamp போன்ற காகித வடிவங்களில் போதைப்பொருள் தடவி அனுப்பப்படும் புதிய வகை போதைப்பொருள் கடத்தல்களையும் கண்காணிக்குமாறு எச்சரிக்கப்பட்டது.

OTP மோசடி, Customs Call Fraud, Fake Delivery Scam, Parcel Fraud உள்ளிட்ட இணையவழி மோசடிகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் காவல் துறை அறிவுறுத்தியது.

திரிபுரா, ஆந்திரா, ஒடிசா மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து வரும் பார்சல்கள் மீது கூடுதல் கண்காணிப்பு செலுத்த வேண்டும் என்றும், வெடிபொருட்கள், போதைப்பொருட்கள், சட்டவிரோத ஆயுதங்கள், தடை செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் லாட்டரி சீட்டுகள் அனுப்பப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

பார்சல்களில் குறிப்பிடப்பட்டுள்ள கைபேசி எண்கள் உண்மையானதா என்பதை உறுதி செய்ய அழைப்பு மூலம் சரிபார்த்த பின்னரே டெலிவரி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும், நிறுவனங்களில் உள்ளே வரும் மற்றும் வெளியே செல்லும் பொருட்களை ஸ்கேனர் மூலம் பரிசோதித்து அனுப்ப வேண்டும் என்றும் கூறப்பட்டது.

வெளிநாடுகளில் இருந்து இங்கு பணிபுரியும் மற்றும் கல்வி பயிலும் நபர்களுக்கு வரும் பார்சல்களையும் கண்காணிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அதேபோல், பணியில் சேர்க்கப்படும் ஊழியர்களின் பின்னணி, முகவரி மற்றும் முன்பு பணிபுரிந்த இடங்கள் குறித்த விவரங்களையும் சரிபார்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

பார்சல் வாகனங்கள் மற்றும் டெலிவரி பணியாளர்களின் விவரங்களை டிஜிட்டல் தரவுத்தளமாக பராமரிக்க வேண்டும் என்றும், பெண்கள் மற்றும் மூத்த குடிமக்கள் வசிக்கும் இடங்களுக்கு டெலிவரி செய்யும் போது பாதுகாப்பு நடைமுறைகள் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என்றும் காவல் துறை தெரிவித்தது.

அனைத்து நிறுவனங்களும் தங்களது சரக காவல் நிலைய காவல் ஆய்வாளர்களின் தொடர்பு எண்களை வைத்திருக்க வேண்டும் என்றும், சந்தேகமான சம்பவங்கள் தொடர்பாக உடனடியாக 8190000100 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. தகவல் வழங்குபவர்களின் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும் காவல் துறை உறுதியளித்தது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...

கோவையில் ரோட்டராக்ட் கிளப் ஆஃப் கோவை நைட்ஸ் சார்பில் ARENA ஸ்போர்ட்ஸ் மீட்

கோவை வெங்கிட்டாபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கமல்நாதன் நினைவு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், தேசிய விளையாட்டு தினத்தை மு...

கோவை வார்டுகள் 12, 13-ல் வளர்ச்சிப் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.12 மற்றும் 13க்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் தொட...

காணியாளம்பாளையம் MIRA HOMES பகுதியில் ஈக்கள் தொல்லை: உடனடி நடவடிக்கை கோரி மனு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா கக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட காணியாளம்பாளையம் MIRA HOMES DTCP அப்ரூவல் வீட்டுமனை பகுதி...

இடையர்பாளையத்தில் காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு கூட்டம்

கோவை மாநகர் மாவட்டம் கவுண்டம்பாளையம் சர்க்கிள் கமிட்டி சார்பாக இந்திய தேசிய காங்கிரஸ் மறு சீரமைப்பு இயக்கத்தின் எஸ் எஸ்...