அந்தகன் திரைப்பட குழுவினர் கோவையில் செய்தியாளர் சந்திப்பு - வயநாடு மக்களுக்கு உதவ பிரசாந்த் வேண்டுகோள்

கோவையில் அந்தகன் திரைப்பட குழுவினர் செய்தியாளர் சந்திப்பு நடத்தினர். வயநாட்டில் மண்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நடிகர் பிரசாந்த் வேண்டுகோள் விடுத்தார். திரைப்படம் ஆகஸ்ட் 9 அன்று வெளியாகிறது.


Coimbatore: கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் அந்தகன் திரைப்பட குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். இந்த சந்திப்பில் நடிகர் பிரசாந்த், நடிகைகள் சிம்ரன், பிரியா ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நடிகர் பிரசாந்த் பேசுகையில், "அந்தகன் திரைப்படம் பார்வையற்ற பியானோ கலைஞர் பற்றிய இசை சார்ந்த படம். அதேசமயம் மர்மம் நிறைந்த சுவாரஸ்ய அம்சங்களும் படத்தில் உள்ளன. விநியோகஸ்தர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் வரும் ஆகஸ்ட் 09 ஆம் தேதி படம் வெளியாக உள்ளது" என்றார்.



மேலும் அவர், "இந்த திரைப்படம் Remake படம் இல்லை, Remade படம். 110 சதவீதம் தமிழ் படம் பார்க்கும் அனுபவத்தை கொடுக்கும். தற்போது அந்தகன் திரைப்படம் 400 திரையரங்குகள் வரை வெளியாக உள்ளது. மேலும் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்" என்று தெரிவித்தார்.

ஹெல்மெட் அணியாததால் அபராதம் விதிக்கப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த பிரசாந்த், "கடந்த ஓராண்டு காலமாக ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி வருகிறேன். எனக்கு அபராதம் விதிக்கப்பட்டதன் மூலம் ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் தற்போது வைரலாகி வருகிறது" என்றார்.



இறுதியாக, "வயநாட்டில் மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய அனைவரும் முன்வர வேண்டும்" என வேண்டுகோள் விடுத்தார் நடிகர் பிரசாந்த்.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...