நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வரும் போலீசார், உயிரிழந்த நபர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




கோவை: கோவை சூலூர் அடுத்த நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில், சுமார் 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் மர்மமான முறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



அச்சங்குளம் பகுதியில் வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் பிணமாகக் கிடப்பதைக் கண்டு, அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக நீலாம்பூர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த நபரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில், இந்த மரணத்தின் பின்னணியில் நள்ளிரவில் நடந்த மோதல் இருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. நேற்று நள்ளிரவில் சம்பவ இடம் அருகே ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த மூவர் இடையே கடுமையான வாக்குவாதம் மற்றும் தகராறு ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

போதை அல்லது பணத் தகராறு காரணமாக, இருவர் சேர்ந்து வாலிபரை தாக்கி கொலை செய்து விட்டு, சடலத்தை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக நீலாம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அச்சங்குளம் மற்றும் நீலாம்பூர் பைபாஸ் சாலைகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். உயிரிழந்த நபர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்தும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், சந்தேகத்திற்கிடமான இருசக்கர வாகன எண்களின் அடிப்படையில் குற்றவாளிகளை பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...