ஒப்பந்தப்படி கூலி வழங்கப்படும் என்ற உறுதியையடுத்து கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்களின் போராட்டம் நிறைவு

ஒப்பந்தப்படி கூலி வழங்கப்படும் என ஜவுளி உற்பத்தியாளர்கள் உறுதி அளித்ததை அடுத்து கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களின் 23 நாட்களாக நடைபெற்று வந்த வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஜவுளி உற்பத்தியாளர்களிடம் இருந்து பாவு நூல் பெற்று துணியாக நெய்து வரும் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களுக்கு சொந்தமாக சுமார் 1.25 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைதறிகள் செயல்பட்டு வருகிறது.

விலைவாசி, மின்கட்டணம், உதிரிபாகங்கள் விலை உயர்வு ஆகியவற்றின் அடிப்படையில் ஜவுளி உற்பத்தியாளர்களிடம் இருந்து கூலி உயர்வு பெற்று வந்த நிலையில், கடந்த 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற பேச்சுவரத்தையில் ஒப்புக்கொண்டப்படி சோமனூர் பகுதி ரகத்திற்கு 30 சதவிகிதமும், மற்ற ரகத்திற்கு 27 சதவிகித கூலி உயர்வையும் விசைத்தறி உரிமையாளர்கள் பெற்றனர்.

இந்நிலையில், தொழில் மந்த நிலையை காரணம் காட்டி சில ஜவுளி உற்பத்தியாளர்கள் கூலியை குறைத்து தருவதாகக் கூறி கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர் சங்கத்திற்குட்பட்ட விசைத்தறி உரிமையாளர்கள் ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக கடந்த வாரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஜவுளி உற்பத்தியாளர்கள் பெரும்பாலானோர் கலந்துகொள்ளாததை அடுத்து பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் விசைத்தறி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். இதில் 2014 ஆம் ஆண்டு நிர்னயம் செய்யப்பட்ட படி ஜவுளி உற்பத்தியாளர்கள் கூலியை வழங்க வேண்டும் எனவும், கூலியை குறைத்து வழங்கினால் மாவட்ட ஆட்சியரிடம் தெரியப்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவிடப்பட்டது.

சுமார் 2 மணி நேரமாக நடைபெற்ற பேச்சு வார்த்தையின் முடிவில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து 23 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்த கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

தொடர்ந்து, விசைத்தறியை இயக்குவது தொடர்பாக நாளை பொதுக்குழு கூட்டி முடிவு எடுக்கப்படும் என விசைத்தறி உரிமையாளர்கள் தெரிவித்தனர். மேலும், 2017 ஆம் ஆண்டிற்கான புதிய கூலி ஒப்பந்தம் தொடர்பாக வரும் வாரங்களில் முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...