நீலகிரியில் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல் கட்சியினர் கைது


தில்லியில் போராடிவரும் தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தியும், விவசாயிகளை வஞ்சித்து வரும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் தமிழகம் முழுவதும் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும், இன்று அரசியல் கட்சியினர் விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.



நீலகிரி மாவட்டம் குன்னூரில் திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், கம்யூனிஸ்ட் கட்சியினர் விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.



மறியலில் ஈடுபட்ட திமுக மாவட்டச் செயலாளர் பா.மு.முபாரக், திமுக நகரச் செயலாளர் ராமசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் பத்ரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட பொருளாளர் மண்ணரசன், குன்னூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் சுதாகர் உள்ளிட்ட கட்சியினர் மற்றும் பொதுமக்கள் என 60-க்கும் மேட்பட்டோரை காவல்துறையினர் கைது செய்து குன்னூர் சி.எஸ்.ஐ வெஸ்லெ தேவாலய மண்டபத்தில் அடைத்தனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...