உடுமலையில் திருப்பூர் மேற்கு மாவட்ட பாமக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

உடுமலை அருகே கிழவன் காட்டூர் கிராமத்தில் திருப்பூர் மேற்கு மாவட்ட பாமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் செயல்பாடுகள் மற்றும் பொறுப்பாளர்கள் தேர்வு குறித்து விவாதிக்கப்பட்டது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கிழவன் காட்டூர் கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருப்பூர் மேற்கு மாவட்ட பாமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டம் மாவட்ட செயலாளர் பழனிச்சாமி தலைமையில் நடத்தப்பட்டது.



கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் செயல்பாடுகளை தீவிரப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.



டாக்டர் ராமதாஸ் வழிகாட்டுதலின்படி, உடுமலை மற்றும் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிகளுக்கான செயலாளர், தலைவர் மற்றும் மகளிர் அணி பொறுப்பாளர்களுக்கான விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. அதைத் தொடர்ந்து நேர்காணலும் நடத்தப்பட்டது.



இந்த நிகழ்வில் பாமக மேற்கு மண்டல பொறுப்பாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கார்த்திகேயன், கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.



மேலும், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திருப்பூர் மேற்கு மாவட்ட தலைவர் சிங்காரவேல், அமைப்பு செயலாளர் மனோகரன், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் மின்னல் செந்தில், ஒன்றிய செயலாளர் சிவபாலு, ஊடகப் பேரவை உறுப்பினர் கனகராஜ், மகளிர் அணி பொறுப்பாளர்களான கல்பனா, கீர்த்தனா, நித்யா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...