வால்பாறையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி மக்களுக்கு நன்றி தெரிவிப்பு

கோவை மாவட்டம் வால்பாறையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி பல்வேறு பகுதிகளுக்குச் சென்று மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எழுப்புவதாக உறுதியளித்தார்.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி வால்பாறை பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வண்ணம் வருகை புரிந்தார்.



வால்பாறையில் உள்ள அட்டகட்டி, வாட்டர்பால்ஸ், பகுதி வழியாக வால்பாறை, கருமலை, பச்சமலை, அக்காமலை, மூவிஸ், சோலையார், பண்ணி மேடு சைக்கிள் முடி, போன்ற பகுதிகளுக்கு நேரில் சென்று அப்பகுதி மக்களை சந்தித்து வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.



பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் 2 லட்சத்திற்கும் மேல் திமுகவிற்கு வாக்கு அளித்து வெற்றி பெற செய்துள்ளதாகவும், வால்பாறை மேல் தொகுதியில் 30 ஆயிரத்துக்கும் மேல் வாக்கு அளித்ததாகவும் ஈஸ்வரசாமி தெரிவித்தார்.

வால்பாறை பகுதியில் உள்ள பிரச்சினைகள், தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு, மாற்று தொழில் மற்றும் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு போன்ற பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் பேசுவதாக உறுதியளித்தார்.

வால்பாறையில் உள்ள அனைத்து எஸ்டேட் பகுதிகளுக்கும் சென்று பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார். இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், நகர செயலாளர் குட்டி என்ற சுதாகர், மற்றும் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள், கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

உலக செவிலியர் தினம்: திருப்பூரில் விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு பேரணிய...

திருப்பத்தூர் TVK எம்.எல்.ஏ. சீனிவாச செதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க Madras High Court தடை

திருப்பத்தூர் தொகுதியில் இரண்டு இடங்களில் ஒரே பெயர் இருப்பதால் DMK முன்னாள் அமைச்சர் K.R. பெரியகருப்பன் தாக்கல் செய்த மன...

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...

வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய பதைபதைப்பு சம்பவம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. சிசிடி...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...