வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய பதைபதைப்பு சம்பவம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. சிசிடிவியில் பதிவான காட்சிகள் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளன. படுகாயமடைந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Coimbatore: கோவை மாவட்டம் வால்பாறை தலைமை அஞ்சலகம் அருகே நடந்த பதைபதைப்பான சாலை விபத்து சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.




வால்பாறை தலைமை அஞ்சலகம் அருகே நாகராஜ் (65) என்பவர் தனது காரை ஓட்டிக்கொண்டு வந்தார். அப்போது அவர் ஓட்டி வந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. அங்கு நடந்து சென்ற வேவர்லி எஸ்டேட்டைச் சேர்ந்த கவிதா (47) என்பவர் மீது கார் பலமாக மோதியது.




மோதலின் தாக்கத்தால் கவிதா பல அடி தூரம் காற்றில் தூக்கி வீசப்பட்டார். பின்னர் கார் கட்டுப்பாட்டை இழந்து எதிரே இருந்த தடுப்புச் சுவரில் மோதி நின்றது. இச்சம்பவத்தில் படுகாயமடைந்த கவிதா உடனடியாக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டது.




மேல்சிகிச்சைக்காக அவர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் அருகில் இருந்த கண்காணிப்பு கேமராவில் முழுமையாக பதிவாகியுள்ளது.




சிசிடிவி காட்சிகளில், கார் பெண் மீது மோதி அவர் காற்றில் பறந்து சென்ற காட்சிகள் பார்ப்போரை பதைபதைக்க வைத்துள்ளன. இச்சம்பவம் தொடர்பாக வால்பாறை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கார் ஓட்டுநர் நாகராஜ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.




விபத்து ஏற்பட்டதற்கான காரணங்கள் குறித்து காவல்துறையினர் விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாகனம் ஓட்டும்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று காவல்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...

கோவை பீளமேடு 27-வது வார்டில் ரேஷன் கடை மற்றும் தூய்மைப் பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதிகளில் பல்வேறு மக்கள் ந...