வால்பாறையில் கன மழை- சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

கோவை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கடுமையாக வெயில் வாட்டி வருகிறது. பகல் நேரம் மட்டுமின்றி இரவு நேரங்களிலும் வெப்பத்தால் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அவதிப்பட்டு வருகின்றனர். 

இதனிடையே, தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறையினை முன்னிட்டு மலைப்பிரதேசங்களை நோக்கு சுற்றுலாவிற்கு மக்கள் படையெடுக்கத் துவங்கியுள்ளனர். 



இந்நிலையில், வால்பாறை பகுதியில் கடந்த 3 நாட்களாக மாலை நேரங்களில் சுமார் ஒரு மணி நேரம் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

மேலும் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் தற்சமயம் வெப்பம் தனிந்து பழைய குளிர்ச்சி நிலை திரும்பியுள்ளதால் உள்ளூர் வாசிகளும், சுற்றுலா பயணிகளும் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.



Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...