பொள்ளாச்சியில் அதிக பாரம் ஏற்றிய 10 லாரிகள் பறிமுதல்: ரூ.8 லட்சம் அபராதம் விதிப்பு

பொள்ளாச்சி பகுதியில் கல்குவாரிகளில் இருந்து கேரளாவுக்கு அதிக பாரம் ஏற்றிச் சென்ற 10 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.8 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.



Coimbatore: பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் இருந்து கேரளாவுக்கு கற்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இதில், சில லாரிகள் சட்டவிரோதமாக அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக கற்களை ஏற்றிச் செல்வது வழக்கமாக உள்ளது.

கோபாலபுரம் மற்றும் வளந்தாயமரம் சோதனை சாவடிகள் வழியாகவும், மாற்றுப் பாதைகள் வழியாகவும் கேரளாவுக்கு அதிக அளவு கற்கள் கொண்டு செல்லப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, இணை போக்குவரத்து ஆணையர் சிவக்குமரன் உத்தரவின் பேரில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் நேற்று இரவு சிறப்பு வாகன தணிக்கை மேற்கொண்டனர்.



இந்த சோதனையின் போது, இரவு நேரங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், அரசு நிர்ணயித்த அளவுக்கு அதிகமாக 20 டன் கற்கள் ஏற்றிச் செல்லப்பட்ட 10 லாரிகள் கண்டறியப்பட்டன. இந்த லாரிகள் உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டு, பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட 10 லாரிகளுக்கு மொத்தம் ரூ.8 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், தொடர்ந்து சோதனைச் சாவடிகளிலும், மாற்று வழிகளிலும் வாகனங்கள் செல்கின்றதா என்பதை கண்காணிக்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறினர்.

Newsletter

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...