இந்திய டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் கோவையில் புற்றுநோய் சிகிச்சை பெறும் குழந்தைகளை சந்தித்தார்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இந்திய டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் இந்திய வீரர்கள் புற்றுநோய் சிகிச்சை பெறும் 14 குழந்தைகளை சந்தித்து ஊக்கமளித்தனர். புச்சி பாபு கிரிக்கெட் போட்டிக்காக கோவை வந்த வீரர்கள் இந்த சந்திப்பை மேற்கொண்டனர்.



Coimbatore: புச்சி பாபு கிரிக்கெட் போட்டி 2024க்காக கோவை வந்துள்ள இந்திய கிரிக்கெட் அணி டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட மும்பை அணியின் வீரர்கள், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் ஒரு அங்கமான SRIOR - ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை & ஆராய்ச்சி மையத்தில் இலவச புற்றுநோய் சிகிச்சை பெற்றுவரும் 14 குழந்தைகளை நேரில் சந்தித்தனர்.

2024 டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா விளையாடியபோது சூர்யகுமார் யாதவின் அதிரடி கேட்ச், போட்டியை இந்திய அணிக்கு சாதகமாக மாற்றியது. இதற்குப் பின் இந்தியா தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றது. அதன்பிறகு ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் ஹீரோவாக மாறிய சூர்யகுமார் யாதவ், கோவையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை ஊக்கப்படுத்தி, அவர்கள் முகத்தில் மகிழ்ச்சியை வரவழைத்தது மூலம் ஹீரோவுக்கும் ஒரு படி மேல் சென்றுள்ளார் எனக் கூறலாம்.



இந்த சந்திப்பின் போது ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை & ஆராய்ச்சி மையத்தில் செயல்படும் இலவச புற்றுநோய் சிகிச்சை வார்டில் உள்ள குழந்தைகள், சூர்யகுமார் யாதவ் மற்றும் குழுவை, சிவப்பு ரோஜாக்களை வழங்கி மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். இதையடுத்து வீரர்கள் குழந்தைகளின் மினி கிரிக்கெட் பேட்களில் கையொப்பமிட்டு அவர்களுக்குப் பரிசுகளை வழங்கினர். சில குழந்தைகளிடம் சூர்யகுமார் யாதவ் உரையாடி அவர்களின் ஆர்வங்கள் குறித்துக் கேட்டறிந்தார்.



தங்களுக்குப் பரிசளித்த வீரர்களுக்கு சூர்யகுமார் யாதவ் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் உருவப்படங்களை நினைவுப் பரிசுகளாக குழந்தைகள் வழங்கினர். இந்த குழந்தைகள் அனைவரும் விரைவில் குணமடைய வேண்டுமென சூர்யகுமார் யாதவ் மற்றும் குழுவினர் வாழ்த்தினர். இதையடுத்து, இந்த வார்டில் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை மற்றும் சிகிச்சையின் காலம் குறித்து சூர்யகுமார் யாதவ், ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை & ஆராய்ச்சி மையம் இயக்குனர் டாக்டர்.பி.குகனிடம் கேட்டறிந்தார்.



டாக்டர்.பி.குகன் குழந்தைகளுக்கு இங்கு வழங்கப்படும் சிகிச்சைகள் மற்றும் அவற்றின் விளைவுகள் பற்றி அவரிடம் விளக்கினார். இந்த வார்டு இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர்.ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களால் 2005 ஆம் ஆண்டில் திறந்து வைக்கப்பட்டதாகவும், இதில் இதுவரை 1000க்கும் மேற்பட்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் இலவசமாக சிகிச்சை பெற்றுள்ளனர் என்றும் தெரிவித்தார்.



ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை & ஆராய்ச்சி மையம் புற்றுநோயியல் துறையின் கடின உழைப்பு மற்றும் இந்த உன்னத நோக்கத்துக்காக ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை அளித்து வரும் மிகப்பெரிய ஆதரவை சூர்யகுமார் யாதவ் பாராட்டினார். இந்த தருணத்தின் போது எஸ்.என்.ஆர். & சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர், தலைமை செயல் அதிகாரி சி.வி.ராம்குமார், SRIOR-ன் இயக்குனர் டாக்டர் பி. குகன்; புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கார்த்திகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...