பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா கோவை வருகை: விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா கோவை விமான நிலையத்தில் வந்திறங்கினார். கேரளாவில் நடைபெறும் ஆர்எஸ்எஸ் கருத்தரங்கில் பங்கேற்க வந்துள்ளார். பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.



கோவை: பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவரும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சருமான ஜெ.பி.நட்டா இன்று கோவை விமான நிலையத்திற்கு வருகை தந்தார். கேரள மாநிலம் பாலக்காட்டில் நடைபெறும் ஆர்எஸ்எஸ் தேசிய கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக அவர் இங்கு வந்திறங்கினார்.



விமான நிலையத்தில் பாஜக தொண்டர்கள் திரளாக குழுமி, ஜெ.பி.நட்டாவிற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.



பாஜக கொடிகளை ஏந்தியவாறு, முழக்கங்களை எழுப்பி அவரை வரவேற்றனர்.



ஜெ.பி.நட்டாவுடன், பாஜக மூத்த தலைவர்களான எச்.ராஜா, தமிழிசை சௌந்தராஜன், பேராசிரியர் கனகசபாபதி, ஏ பி முருகானந்தம் ஆகியோரும் விமானத்தில் வந்திறங்கினர்.



விமான நிலையத்திலிருந்து ஜெ.பி.நட்டா சாலை மார்க்கமாக பாலக்காடு நோக்கி புறப்பட்டார். அவர் இன்று இரவு பாலக்காட்டில் தங்க உள்ளதாகவும், நாளை நடைபெறும் ஆர்எஸ்எஸ் தேசியக் கருத்தரங்கில் கலந்து கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...