பெண்கள் துணிச்சலுடன் புகார் அளிக்க வேண்டும்: வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ வலியுறுத்தல்

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறித்து கவலை தெரிவித்து, பெண்கள் துணிச்சலுடன் புகார் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.


Coimbatore: கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் செப்டம்பர் 1 அன்று வெளியிட்ட செய்தி குறிப்பில், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து நடைபெறுவது குறித்து தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

கொல்கத்தா மருத்துவக் கல்லூரியில் பயிற்சி மருத்துவர் மீதான பாலியல் வன்கொடுமை, கிருஷ்ணகிரி தனியார் பள்ளியில் போலி என்.சி.சி முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்தது, மலையாள திரைப்பட உலகில் நடிகைகளுக்கு இழைக்கப்பட்ட பாலியல் துன்புறுத்தல்கள் போன்ற சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

"இது தொழில்நுட்ப யுகம். எது செய்தாலும் வெளியே தெரிந்து விடும். தப்பிக்க முடியாது என்று தெரிந்தும் தூய்மை பணியாளரில் இருந்து உயர் அதிகாரிகள் வரை பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவது தொடர்கிறது. இந்த தைரியம் அவர்களுக்கு எப்படி வருகிறது?" என்று வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

பெண்கள் எவ்வளவு படித்திருந்தாலும், உயர்ந்த பதவிகளில் இருந்தாலும், சில ஆண்கள் அவர்களை போகப் பொருளாகவே பார்ப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். திருச்சி என்.ஐ.டி.யில் படித்த மாணவிக்கு, கேபிள் வயர் பொருத்த வந்த ஒப்பந்த பணியாளர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவத்தை உதாரணமாக குறிப்பிட்டுள்ளார்.

மலையாள திரைப்பட உலகில் பெண் கலைஞர்களுக்கு நடந்த பாலியல் அத்துமீறல்கள் குறித்தும் அவர் கவலை தெரிவித்துள்ளார். "எந்த இடத்தில் இருந்தாலும், எந்த நிலையில் இருந்தாலும் பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும். ஆண்களுக்கு எந்த வகையிலும் பெண்கள் சளைத்தவர்கள் அல்ல என்பது நிரூபிக்கப்பட்டு விட்டது" என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

"எதற்கும் பயப்படாமல், எல்லாவற்றையும் சகித்துக் கொள்ளாமல் பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்து பெண்கள் புகார் அளிக்க வேண்டும். அவர்களுக்கு சட்டம் துணையாக இருக்கிறது" என்று வானதி சீனிவாசன் அறிவுறுத்தியுள்ளார்.

பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபடுவோர் யாரும் தப்பிவிடக் கூடாது என்றும், அவர்களுக்கு கிடைக்கும் தண்டனைதான் இனி அதுபோல வேறொருவர் செய்யாமல் தடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். நிறுவனங்களும், அரசும் பெண்கள் துணிச்சலுடன் புகார் அளிக்கும் சூழலை உருவாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Newsletter

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...