யார் அரசியலுக்கு வந்தாலும் கவலையில்லை, மக்கள் எங்கள் பக்கம் - அமைச்சர் மு.பெ. சாமிநாதன்

பொள்ளாச்சி அருகே நடைபெற்ற திமுக கூட்டத்தில் அமைச்சர் மு.பெ. சாமிநாதன், நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் குறித்து கருத்து தெரிவித்தார். திமுகவின் நலத்திட்டங்கள் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாக அவர் கூறினார்.



Coimbatore: திருப்பூர் தெற்கு மாவட்டம் ஒருங்கிணைந்த பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய திமுக பொதுகுழு உறுப்பினர்கள் கூட்டம் பொள்ளாச்சி அருகே திப்பம்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பத்மநாபன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் திமுக ஒன்றிய செயலாளர், கிளைச் செயலாளர் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் போது, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும், வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கு எவ்வாறு களப்பணி ஆற்ற வேண்டும் என்பது குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.



கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதனிடம், நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர், "ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி துவங்கினாலும் எங்களுக்கு ஆட்சேபனையும் இல்லை, வருத்தமும் இல்லை. அதே நேரத்தில் திமுகவிற்கு கூடுதலான வாக்குகள் கிடைத்து வருகிறது," என்றார்.

மேலும் அவர், "கடந்த மூன்று ஆண்டுகால திமுக ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்திய முதல்வரின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் பொதுமக்கள், குறிப்பாக பெண்களுக்கு மத்தியில் அன்பைப் பெற்றுள்ளது. திமுக கூட்டணிக்கு வாக்களிக்க மக்கள் தயாராக உள்ளனர். எனவே, எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. மக்கள் எங்கள் பக்கம் உள்ளனர்," என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...