கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டில் 103.5 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்

கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டில் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் 103.5 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. 9 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்படவுள்ளது.


கோவை: கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார்பாடி உத்தரவின் பேரில், உணவுப் பாதுகாப்பு துறை மற்றும் மீன் வளர்ச்சி துறை அதிகாரிகள் அடங்கிய 6 குழுக்கள் உக்கடம் பகுதியில் உள்ள மீன் மார்க்கெட்டுகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டன.

உக்கடம் லாரி பேட்டை பகுதியில் உள்ள 35 மொத்த மீன் விற்பனை கடைகள் மற்றும் செல்வபுரம் பைபாஸ் சாலையில் உள்ள உக்கடம் சில்லறை மீன் மார்க்கெட் பகுதியில் உள்ள 16 கடைகள் என மொத்தம் 51 கடைகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.



இந்த திடீர் சோதனையின் போது, மொத்த மீன் விற்பனை கடைகளில் 5 கடைகளில் சுமார் 65 கிலோ அளவிலான கெட்டுப்போன மீன்களும், 4 சில்லறை மீன் விற்பனை கடைகளில் சுமார் 38.05 கிலோ கெட்டுப்போன மீன்களும் கண்டுபிடிக்கப்பட்டன. மொத்தம் 103.5 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. இவற்றின் மொத்த சந்தை மதிப்பு சுமார் ரூ.50,150 ஆகும்.

கெட்டுப்போன மீன்களை விற்பனைக்கு வைத்திருந்த 9 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இது போன்று கெட்டுப்போன மற்றும் பழைய மீன்களை விற்பனை செய்பவர்கள் மீது உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் இது போன்ற திடீர் ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

பொதுமக்கள் இது போன்ற குறைபாடுகளை கண்டறிந்தால், உணவுப் பாதுகாப்பு துறையின் வாட்ஸ்அப் எண் 9444042322-க்கு தகவல் தெரிவிக்கலாம். மேலும், Google Play Store-இல் கிடைக்கும் 'tnfoodsafetyconsumer' என்ற செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...

12,522 மெட்ரிக் டன் உர இருப்பு கோவையில்; முறைகேடு செய்தால் உரிமம் ரத்து

கோவை மாவட்டத்தில் வரவிருக்கும் கோடைப்பயிர் சாகுபடிக்காக 12,522 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை...

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...