கோவை அரசு பேருந்தில் பயணிகள் அமரும் இடத்தில் விரிசல்: அதிகாரிகள் பணிநீக்கம்

கோவையில் அரசு பேருந்தில் பயணிகள் அமரும் இடத்தில் விரிசல் ஏற்பட்டு சக்கரம் தெரிந்ததால் பரபரப்பு. வீடியோ வைரலானதை அடுத்து இரண்டு அதிகாரிகள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர்.


கோவை: கோவை மாவட்டம் சிங்காநல்லூர் முதல் குரும்பபாளையம் வரை இயக்கப்படும் 110 எண் கொண்ட அரசு பேருந்தில் பயணிகள் அமரும் இடத்தில் பலகை விரிசல் ஏற்பட்டு சக்கரம் தெரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு குரும்பபாளையம் பகுதியைச் சேர்ந்த விஷ்ணு என்பவர் இந்த பேருந்தில் பயணித்துள்ளார். அவர் பேருந்தில் ஏறி சக்கரத்தின் அருகே உள்ள இருக்கையில் அமர்ந்தபோது, பலகையில் விரிசல் ஏற்பட்டு பேருந்தின் சக்கரங்கள் தெரிந்துள்ளன. இது குறித்து நடத்துனரிடம் கேள்வி எழுப்பியபோது, முறையான பதில் கிடைக்காததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.



இந்த சம்பவத்தை விஷ்ணு வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். வீடியோ வைரலான நிலையில், கோவை கோட்ட பொதுமேலாளர் உத்தரவின் பேரில் ஒண்டிப்புதூர் கிளை மேலாளர் மணிவண்ணன் மற்றும் உதவி பொறியாளர் சீனிவாசன் ஆகிய இருவரும் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பேருந்துகளின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. பொதுப் போக்குவரத்து துறை அதிகாரிகள் பேருந்துகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் இருக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...