கோவை மாணவிகள் அஸ்மிதா மகளிர் யோகா போட்டியில் 11 பதக்கங்கள் வென்று சாதனை

திருச்சியில் நடைபெற்ற தென் மண்டல அளவிலான அஸ்மிதா கேலோ இந்தியா மகளிர் யோகா போட்டியில் கோவை மாணவிகள் 3 தங்கம் உட்பட 11 பதக்கங்கள் வென்றனர். வெற்றி பெற்ற மாணவிகள் கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.


கோவை: திருச்சியில் தமிழ்நாடு இளைஞர் விளையாட்டு யோகாசன சங்கம், இந்திய விளையாட்டு ஆணையம் மற்றும் யோகாசன பாரத் சார்பாக நடைபெற்ற தென் மண்டல அளவிலான அஸ்மிதா கேலோ இந்தியா மகளிர் யோகா போட்டியில் கோவை மாணவிகள் சிறப்பாக செயல்பட்டு 11 பதக்கங்களை வென்றுள்ளனர்.

இப்போட்டியில் புதுவை, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய 6 மாநிலங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட யோகா வீராங்கனைகள் பங்கேற்றனர். தமிழ்நாடு அணி சார்பாக கோவை யோவா யோகா அகாடமியின் தலைமை பயிற்சியாளர் வைஷ்ணவி மற்றும் அவரது மாணவிகள் தாக்ஷயா ஸ்ரீ, சக்தி சஞ்சனா, ராகவர்தினி, பவ்ய ஸ்ரீ, ஷிவானி ஆகிய ஆறு பேர் கலந்து கொண்டனர்.



18 வயதிற்கு உட்பட்ட மற்றும் அதற்கு மேல் என இரு பிரிவுகளாக நடைபெற்ற போட்டிகளில், கலை ஜோடி, பாரம்பரிய யோகா, கலை ஒற்றையர், கலை குழு என பல்வேறு பிரிவுகளில் மூன்று தங்கம், எட்டு வெண்கலம் என மொத்தம் 11 பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர். இப்போட்டியில் வெற்றி பெற்றவர்கள் அனைவரும் தேசிய அளவிலான அஸ்மிதா கேலோ இந்திய பெண்கள் லீக் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

வெற்றி பெற்று திரும்பிய வீராங்கனைகள் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி-ஐ சந்தித்து வாழ்த்து பெற்றனர். இச்சந்திப்பின் போது, தேசிய அளவில் நடைபெற உள்ள மகளிர்க்கான போட்டியில் கலந்து கொள்ள உள்ள மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தொடர்ந்து வீராங்கனைகள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ஆனந்த் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கோவை பிரிவு சீனியர் மேனேஜர் அருணா ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்த சந்திப்பின் போது யோவா யோகா அகாடமியின் இயக்குனர் சரவணன் மற்றும் மாணவிகளின் பெற்றோர்கள் உடனிருந்தனர்.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...