குனியமுத்தூர் தடுப்பணை தூர்வாரும் பணியில் ஈடுபட்ட கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர்

கோவை மாவட்டத்தில் அழிந்துவரும் நீர்நிலைகளை மீட்டெடுக்கும் நோக்கத்துடன் கோவையில் தன்னார்வலர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் ஆகியோரால் உருவாக்கப்பட்டதே கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு.



இக்குழுவினர் வார இறுதிநாளான ஒவ்வொரு ஞாயிறன்றும் நீர்நிலைகளில் களப்பணியில் ஈடுபட்டு தூர்வாரி வருகின்றனர். அதன்படி கடந்த இரு வாரங்களாக வெள்ளலூர் குளத்தில் களப்பணியில் ஈடுபட்டு சீமைக்கருவேள மரங்களை அகற்றினர். தொடர்ந்து, கடந்த வாரங்களில் ஆத்துப்பாளம் அருகே வெள்ளலூர் தடுப்பணையில் உள்ள சாக்கடை கழிவுகளை அகற்றி தூர்வாரும் பணி நடைபெற்றது. இதில் சுமார் 150-க்கும் மேற்பட்ட கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் இணைந்து லாரிகள் மூலம் குப்பைக் கழிவுகளை அகற்றினர்.



தொடர்ந்து, இந்த வாரம் தூர்வாரும் பணியாக நமது கோவை நமது பசுமை, மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் இணைந்து இன்று குனியமுத்தூர் தடுப்பணை மற்றும் 12.5 கிலோமீட்டர் வாய்க்கால் தூர் வாரும் பணி நடைபெற்றது.



இதில், நான்கு குளத்திற்கு தண்ணீர் வருவதற்கு முக்கிய ஆதாரமாக இருக்கும் குனியமுத்தூர் தடுப்பணை மற்றும் 12.5 கிலோமீட்டர் வாய்க்கால் தூர் வாரப்பட்டது. இப்பணிகளில் 150-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள், மூன்று ஜே.சி.பி.இயந்திரங்கள் உதவியுடன் தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர்.



Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...