மேட்டுப்பாளையம் அருகே கார் விபத்து: தீயில் சிக்கி ஓட்டுநர் பரிதாப உயிரிழப்பு

மேட்டுப்பாளையம் அருகே அன்னூர் சாலையில் அதிவேக கார் பாலத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் தீப்பிடித்த காரில் சிக்கி ஓட்டுநர் உயிரிழந்தார். சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Coimbatore: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே அன்னூர் சாலையில் நேற்று நள்ளிரவு சுமார் 12 மணியளவில் பயங்கர விபத்து ஒன்று நடந்தது. அதிவேகமாக வந்த கார் ஒன்று தென்திருப்பதி நால்ரோடு பகுதியில் உள்ள குளிர்பதன கிடங்கு அருகே உள்ள பாலத்தின் மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்தது.

விபத்துக்குள்ளான கார் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. காரின் ஓட்டுநர் இருக்கையில் சிக்கிக் கொண்ட நிலையில், தீ பிடித்து எரிந்த காரிலிருந்து வெளியேற முடியாமல் தவித்தார். இதனால் உடல் கருகி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.



தகவல் அறிந்ததும், மேட்டுப்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலசுந்தரம் தலைமையிலான தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். காரில் பிடித்த தீ அருகிலுள்ள வீடுகளுக்கும் பரவி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. தீயணைப்பு வீரர்கள் தீவிர முயற்சி எடுத்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் உயிரிழந்தவர் சிறுமுகை அருகே உள்ள கோவிந்தனூரை சேர்ந்த நவீன்குமார் என தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...