மருத்துவ மேற்படிப்பிற்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்ததைக் கண்டித்து கோவையில் மருத்துவர்கள் உண்ணாவிரதம்


அரசு மருத்துவ மேற்படிப்பிற்கான இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து, கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



அரசு மருத்துமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் மருத்துவ மேற்படிப்பு படிக்க மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுவந்தது. கடந்த 25 வருடங்களாக இருந்து வந்த இந்த ஒதுக்கீட்டை தற்போது நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

இந்நிலையில் இட ஒதுக்கீட்டை பெற்றுத்தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, கோவை அரசு மருத்துவமனை மருத்துகள் 13-வது நாளாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

அதப்டி, இன்று கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது, மருத்துவ மேற்படிப்பிற்கான இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டால் கிராமங்களுக்கு மருத்துவர்கள் செல்லாத நிலை ஏற்படும். உடனடியாக தமிழக அரசு இவ்விவகாரத்தில் தலையிட்டு அவரச சட்டம் இயற்ற வேண்டும் என  மருத்துவர்கள் வலியுறுத்தினர்.

மேலும், இக்கோரிக்கையை வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...