பீளமேடு, சமத்தூர், கோவில்பாளையம் பகுதிகளில் நாளை மின்தடை: மின்வாரியம் அறிவிப்பு

கோவையில் பீளமேடு, சமத்தூர், கோவில்பாளையம் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (செப்.12) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பல பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின் வாரியம் அறிவித்துள்ளது.


Coimbatore: கோவை மின் வாரிய அதிகாரிகள் இன்று வெளியிட்ட அறிவிப்பில், நாளை (செப்டம்பர் 12) பீளமேடு, சமத்தூர் மற்றும் கோவில்பாளையம் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், பல பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.

பீளமேடு துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பாரதி காலனி, இளங்கோ நகர், புரானி காலனி, ஷோபா நகர், கணபதி இன்டஸ்ட்ரியல் எஸ்டேட், காவலர் குடியிருப்பு, கிருஷ்ணராஜபுரம், அத்திப்பாளையம் பிரிவு, ராமகிருஷ்ணாபுரம், ஆவாரம்பாளையம், கணேஷ் நகர், வி.ஜி.ராவ் நகர், காமதேனு நகர், பி.எஸ்.ஜி எஸ்டேட், பி.எஸ்.ஜி. மருத்துவமனை, நேரு வீதி, அண்ணா நகர், ஆறுமுகம் லே-அவுட், இந்திரா நகர், நவ இந்தியா, கோபால் நகர், பீளமேடுபுதூர், எல்லைத் தோட்டம், வஉசி காலனி, பி.கே.டி.நகர், அகிலாண் டேஸ்வரி நகர், புலியகுளம், அம்மன் குளம், பாரதிபுரம், பங்கஜா மில், தாமு நகர், பாலசுப்பிரமணியம் நகர், பாலகுரு கார்டன், சௌரிபாளையம், கிருஷ்ணா காலனி, ராஜாஜி நகர், மீனா எஸ்டேட், உடையாம்பாளையம், ராஜீவ் காந்தி நகர், பார்சன் அப்பார்ட்மென்ட்ஸ், ஸ்ரீபதி நகர், கள்ளிமடை, ராமநாதபுரம், திருச்சி சாலை(ஒரு பகுதி), நஞ்சுண்டாபுரம் சாலை மற்றும் திருவள்ளுவர் நகர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

சமத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், சமத்தூர், ஆவல்சின்னம்பாளையம், தளவாய்பாளையம், பாளையூர், நாச்சிபாளையம், பொன்னாபுரம், பொள்ளாச்சியூர், பில்சினாம்பாளையம், ஜமின்கொட்டாம்பட்டி, வடுகபாளையம், குறிஞ்சரி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

கோவில்பாளையம் துணை மின் நிலையத்திலும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், குரும்பபாளையம், மண்ணிக்கம்பாளையம், அக்ரகார சாமகுளம், குன்னத்தூர், சர்க்கார்சமகுளம், கோவில்பாளையம், கல்லிபாளையம், மொண்டிகாலிபுதூர், கொண்டையம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

இந்த மின்தடை அனைத்து பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இருக்கும் என மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் இதனை கவனத்தில் கொண்டு தங்களது அன்றாட பணிகளை திட்டமிட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...