கோவையில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா: பெருந்திரளாக பங்கேற்க அழைப்பு

கோவை காந்திபுரத்தில் பேரறிஞர் அண்ணாவின் 116வது பிறந்தநாள் விழா செப்டம்பர் 15 அன்று நடைபெறவுள்ளது. கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாக பங்கேற்க கோவை மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் அழைப்பு விடுத்துள்ளார்.


கோவை: கோவை மாநகர மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் Ex.எம்எல்ஏ, பேரறிஞர் அண்ணாவின் 116வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடைபெறும் மரியாதை நிகழ்வில் பெருந்திரளாக பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், திராவிட இயக்கத்தின் முன்னோடியுமான பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா வரும் செப்டம்பர் 15ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணியளவில் கோவை காந்திபுரத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் வகையில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் மாநகர மாவட்ட நிர்வாகிகள், கோவை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர், தலைமைக் கழக நிர்வாகிகள், மேயர், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதிச் செயலாளர்கள், மாநகராட்சி மண்டல தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், வட்டக்கழகச் செயலாளர்கள், மாவட்ட அணிகளின் தலைவர்கள், அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், துணைத் தலைவர்கள், பகுதிக்கழக நிர்வாகிகள், வட்டக்கழக நிர்வாகிகள், BLA 2, பூத் கமிட்டி உறுப்பினர்கள், கழக செயல்வீரர்கள், கழகத் தோழர்கள் மற்றும் கழக முன்னணியினர் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும் என்று நா.கார்த்திக் தனது முகநூல் பக்கத்தில் அழைப்பு விடுத்துள்ளார்.

"கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு" எனும் கோட்பாடுகளை வலியுறுத்தியவரும், சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என்று பெயர் மாற்றியவருமான பேரறிஞர் அண்ணா, 1967இல் முதன் முறையாக திராவிட ஆட்சியை தமிழகத்தில் அமைத்தார். அவர் ஆட்சிப் பொறுப்பேற்றதும் சுயமரியாதைத் திருமணங்களை சட்டபூர்வமாக்கி தனது திராவிடப் பற்றை உறுதிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக கை சுகாதார தினம் 2026 சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நோய் தொற்று கட்டுப்பாட்டு துறை சார்பில் உலக கை சுகாதார தினம் 2026-...

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...