அன்னபூர்ணா நிறுவனரை அவமதித்ததற்காக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மன்னிப்புக் கேட்க வேண்டும்: எம்.பி. செ.ஜோதிமணி

கோவை அன்னபூர்ணா உணவக உரிமையாளர் சீனிவாசன் ஜி.எஸ்.டி குறித்து கூறிய கருத்துக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எதிர்வினையாற்றியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கரூர் எம்.பி. செ.ஜோதிமணி இது குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார்.


Coimbatore: கோவை அன்னபூர்ணா உணவகத்தின் நிறுவனர் சீனிவாசன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ஜி.எஸ்.டி தொடர்பான கருத்தை முன்வைத்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

வெற்றிகரமாக தொழில் நடத்தி பலருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் ஒருவர், தனது அனுபவத்தின் மூலம் பகிர்ந்து கொள்ளும் கருத்தை செவிமடுத்து, அதை சரிசெய்ய வேண்டியது நிதியமைச்சரின் கடமை என கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் செ.ஜோதிமணி கருத்து தெரிவித்துள்ளார்.

ஆனால், அதை செய்யாமல் சீனிவாசனை மன்னிப்பு கேட்க வைத்து, அந்த வீடியோவை வெளியிடுவது ஆணவத்தின் உச்சம் என்றும், அறுவெறுப்பானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"அவர் என்ன பெரிய குற்றம் செய்துவிட்டார் மன்னிப்பு கேட்பதற்கு? உண்மையைப் பேசுவது ஒரு குற்றமா?" என்று செ.ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாட்டில், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஒரு தொழிலதிபருக்கு நிகழ்ந்த இந்த அவமதிப்பிற்கு வருந்துவதாகவும், பாஜக, பாசிசம் என்ன செய்யும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சாட்சி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "நீங்கள் பாஜகவிற்கு அள்ளிக்கொடுத்தாலும், அவர்களுக்கு அடிமையாகத்தான் இருக்கவேண்டும். அவர்கள் முன்னால் கை கட்டி வாய் பொத்தி நிற்கவேண்டும் என்று தான் எதிர்பார்ப்பார்கள். மற்றவர்களுக்கு சொந்தக் கருத்தே இருக்கக்கூடாது என்பதுதான் அவர்களின் உறுதியான நிலைப்பாடு" என்றும் செ.ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

அன்னபூர்ணா நிறுவனரை அவமதித்ததற்காக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும், சீனிவாசனுக்கு தனது அன்பையும் ஆதரவையும் தெரிவிப்பதாகவும் செ.ஜோதிமணி கூறியுள்ளார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...