கோவையில் வீட்டுவசதி வாரிய ஒதுக்கீட்டாளர்கள் செப்டம்பர் 30க்குள் நிலுவைத் தொகையை செலுத்த வேண்டும் - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, வீட்டுவசதி வாரிய ஒதுக்கீட்டாளர்கள் செப்டம்பர் 30க்குள் நிலுவைத் தொகையை செலுத்தாவிட்டால் ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என எச்சரித்துள்ளார். 1,777 பேர் நிலுவைத் தொகையை செலுத்தவில்லை.


Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி செப்டம்பர் 12 அன்று வெளியிட்ட செய்தி குறிப்பில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் வீடு மற்றும் மனை ஒதுக்கீடு பெற்றவர்கள் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் கணக்கை நேர் செய்யாவிட்டால் ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்று எச்சரித்துள்ளார்.


தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் கோவை வீட்டுவசதி பிரிவுக்குள்பட்ட கணபதி, வெள்ளக்கிணறு, பெரியநாயக்கன்பாளையம், வீரகேரளம், காளப்பட்டி, முதலிபாளையம் பகுதிகளில் வீடு மற்றும் மனை ஒதுக்கீடு பெற்ற 1,777 பேர் வாரிய விதிமுறைகளின்படி பணம் செலுத்தும் காலம் முடிவடைந்தும் பணம் செலுத்தாமல் உள்ளனர்.


அரசு சார்பில் வட்டி தள்ளுபடி சலுகை பலமுறை அளித்தும் இந்த ஒதுக்கீட்டாளர்கள் நிலுவைத் தொகையை செலுத்த முன்வரவில்லை என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார். எனவே, ஒதுக்கீட்டுதாரர்கள் உடனடியாக தங்களிடம் உள்ள அசல் விண்ணப்பம், ஒதுக்கீட்டு ஆணை, அசல் ரசீதுகள் போன்ற ஆவணங்களுடன் வரும் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் கோவை வீட்டுவசதி பிரிவு அலுவலகத்தைத் தொடர்புகொண்டு, நிலுவைத் தொகையை செலுத்தி கிரைய பத்திரம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.


மேலும், நிலுவைத் தொகையை செலுத்தாதவர்களின் ஒதுக்கீடு உத்தரவு எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் ரத்து செய்யப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி எச்சரித்துள்ளார்.

Newsletter

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...