கோவையில் 'ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ்' மாரத்தான் - குழந்தைகளின் இதய நோய் மற்றும் புற்றுநோய் விழிப்புணர்வுக்காக நடைபெறுகிறது

கோவையில் GKNM மருத்துவமனை சார்பில் செப்டம்பர் 29 அன்று 'ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ்' மாரத்தான் நடைபெறுகிறது. குழந்தைகளின் இதய நோய் மற்றும் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கம்.


Coimbatore: கோயம்புத்தூர் கோ.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை (GKNM) சார்பாக உலக இருதய தினமான செப்டம்பர் 29 அன்று 'ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ்' என்ற மாரத்தானின் இரண்டாவது பதிப்பு நடைபெறவுள்ளது. இந்த மாரத்தான் இதயக் குறைபாடுகள் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் வகையில் நடத்தப்படுகிறது.

செப்டம்பர் மாதம் குழந்தைகள் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாகவும், செப்டம்பர் 29 உலக இதய தினமாகவும் அனுசரிக்கப்படுகிறது. பொதுமக்கள், குழந்தைகள் புற்றுநோய் மற்றும் குழந்தைகளின் இதய குறைபாடுகள் குறித்து போதிய விழிப்புணர்வு பெற வேண்டும் என்பதற்காக, அன்று காலை 5:30 மணிக்கு கோவை, பாப்பநாயக்கன்பாளையம், மணி மேல்நிலைப் பள்ளியில் இந்த மாரத்தான் நடைபெறவுள்ளது.

மாரத்தான் மூன்று வெவ்வேறு பிரிவுகளில் நடைபெறுகிறது:

1. 1 & 3 கி.மீ. - எல்லா வயதினருக்கும். குழந்தைகள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் ஒன்றாக ஓடலாம்.

2. 5 கி.மீ. - 12 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் சிறுமிகளுக்கும், 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கும்.

3. 10 கி.மீ. - 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொள்ளலாம்.

5 மற்றும் 10 கிமீ பிரிவுகளில் வெற்றி பெறுபவர்களுக்கு, ரொக்க பரிசு தொகை ரூ.75,000 அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாரத்தான் கோயம்புத்தூர் மாவட்ட தடகள சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும், LMW, Lakshmi Mills Co. Ltd மற்றும் Lakshmi Card Clothing ஆகிய நிறுவனங்களும் இணைந்து நடத்துகின்றன.

செப்டம்பர் 16, 2023 அன்று GKNM மருத்துவமனை வளாகத்தில் மாரத்தான் டி-சர்ட் மற்றும் பதக்கத்தின் வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் போது, GKNMH இன் தலைமை செயல் அதிகாரி டாக்டர் ரகுபதி வேலுசுவாமி பேசுகையில், "ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ் 2022 இன் முதல் பதிப்பில், 2000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும், இதய குறைபாடுகள் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 29 குழந்தைகள், இந்த மரத்தானில் கிடைத்த நிதி மூலம் பயனடைந்தனர்" என்றார்.

மேலும் அவர், "KNC அறக்கட்டளையின் ஒரு பிரிவான GKNM மருத்துவமனை, கோயம்புத்தூர் நகரத்தில் குழந்தைகளுக்கான இருதய பராமரிப்பு மற்றும் குழந்தைகளுக்கான புற்றுநோயியல் சிகிச்சையில் முன்னோடியாக உள்ளது. இந்த இரண்டு மருத்துவ பிரிவுகளுமே, நவீன தொழிநுட்பங்களுடனும், உலகத்தரமான மருத்துவக் கருவிகளுடனும் கட்டமைக்கப்பட்டுள்ளன" என்றும் குறிப்பிட்டார்.

கடந்த முறை போலவே இம்முறையும், GKNM மருத்துவமனையில் புற்றுநோய் மற்றும் இருதய குறைபாடுகளுக்காக சிகிச்சை பெற்று குணமடைந்த குழந்தைகள், இந்த மரத்தானில் கலந்து கொள்ள உள்ளனர். டாக்டர் ரகுபதி வேலுசாமி, "குணமடைந்த குழந்தைகள், எல்லா விதங்களிலும், மற்ற குழந்தைகள் போலவே பிற்காலத்தில் பல்வேறு துறைகளில் பல சாதனைகள் புரிந்து வெற்றியாளர்களாக திகழ முடியும். எனவே பெற்றோர்கள், பாதிப்பு உள்ள குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் தகுந்த மருத்துவ சிகிச்சைக்கு எந்த ஒரு தயக்கமுமின்றி ஏற்பாடு செய்ய வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

பொதுமக்கள் அனைவரும் ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ் மாரத்தானில் பதிவுசெய்து ஆதரிக்கவும், குழந்தைகளின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பதிவு செய்ய ticketprix.com ஐ பயன்படுத்தலாம் அல்லது 97900 72303 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...