அன்னூர் அருகே வாக்கனாங்கொம்பு கிராமத்தில் கிராவல் மண் எடுப்பதற்கு எதிர்ப்பு: பொதுமக்கள் லாரிகளை சிறைபிடித்து போராட்டம்

கோவை மாவட்டம் அன்னூர் அருகே வாக்கனாங்கொம்பு கிராமத்தில் கிராவல் மண் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் லாரிகளை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். சுற்றுச்சூழல் பாதிப்பு, நிலத்தடி நீர் பாழாதல் போன்ற காரணங்களை முன்வைத்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் அன்னூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வாக்கனாங்கொம்பு பகுதியில் அரசு அனுமதியுடன் கிராவல் மண் எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. கோவை கனிமவளத்துறை அதிகாரிகள் அனுமதி பெற்று திண்டுக்கல்லை சேர்ந்த ஒப்பந்ததாரர் ஒருவர் கிராவல் மண் எடுத்து விற்பனை செய்து வருகிறார்.

இந்நிலையில், கிராவல் மண் எடுப்பதால் தங்கள் கிராமத்தின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும், எதிர்வரும் தலைமுறையினருக்கு நிலத்தடி நீர் பாழாகும் என்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர் அப்பகுதி மக்கள். மேலும், அதிக அளவில் லாரிகள் கிராம சாலைகள் வழியாக சென்று வருவதால் சாலை சேதம் அடைவதாகவும் குற்றம் சாட்டினர். இதனால், கிராவல் மண் எடுக்க அதிகாரிகள் அனுமதி வழங்கக் கூடாது என்பதை வலியுறுத்தி கிராவல் மண் எடுத்து வந்த லாரிகளை சிறைப்பிடித்து வாக்கனாங்கொம்பு ஊர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இது குறித்த தகவல் அறிந்து வந்த அக்கரை செங்கப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அன்னூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், உரிய அனுமதி உள்ளதா என ஒப்பந்ததாரரிடம் ஆவணங்களை சரிபார்த்தனர்.

கோவை கனிமவளத்துறை அதிகாரிகளின் அனுமதி கடிதம் பெற்று கிராவல் மண் அள்ளப்படும் நிலையில், பொதுமக்கள் தங்கள் கிராமத்தில் மண் எடுக்க அனுமதி கொடுக்க கூடாது என்றும், அதை தாங்கள் ஏற்க மாட்டோம் என்றும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து, கிராவல் மண் எடுக்கும் பணியை நிறுத்துமாறு காவல்துறையினர் அறிவுறுத்தினர்.

அதிகாரிகள் மண் எடுக்க வேண்டாம் என ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதை எழுத்துப்பூர்வமாக எழுதி கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகளை சந்தித்து மனு அளிக்க அறிவுறுத்தினர். புகார் குறித்து மாவட்ட நிர்வாகம் பரிசிலித்து உரிய நடவடிக்கை எடுக்கும் என அதிகாரிகள் தெரிவித்ததன் பேரில் பொதுமக்கள் லாரிகளை விடுவித்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...