கோவை ஈஷா யோக மையத்தில் ஆதியோகி திவ்ய தரிசனம் 5 நாட்கள் நிறுத்தம்

கோவை ஈஷா யோக மையத்தில் ஆதியோகி திவ்ய தரிசனம் பராமரிப்பு பணிகளுக்காக செப்டம்பர் 24 முதல் 28 வரை நிறுத்தப்படுகிறது. பக்தர்கள் ஆதியோகி மற்றும் யோகேஸ்வர லிங்கத்தை வழக்கம் போல் தரிசிக்கலாம்.


கோவை: கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறும் ஆதியோகி திவ்ய தரிசன நிகழ்வு பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 28-ம் தேதி வரை நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஆதியோகி மற்றும் யோகேஸ்வர லிங்கத்தை பக்தர்கள் வழக்கம் போல் தரிசனம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோக மையத்திற்கு உலகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் வருகை தருகின்றனர். குறிப்பாக, அவர்கள் இரவு 7.20 மணிக்கு தொடங்கும் ஆதியோகி திவ்ய தரிசனத்தை கண்டு ரசிப்பதில் பெரும் ஆர்வம் காட்டுகின்றனர்.

15 நிமிடங்கள் நடைபெறும் இந்த நிகழ்வில் ஆதியோகி சிவன் சப்தரிஷிகளுக்கு யோக விஞ்ஞானத்தை பரிமாறிய வரலாறு சத்குருவின் கம்பீர குரலில் ஒளி, ஒலி காட்சியாக விவரிக்கப்படும். மக்களை கவர்ந்த இந்நிகழ்வு செப்டம்பர் 24-ம் தேதி முதல் செப்டம்பர் 28-ம் தேதி வரை தற்காலிகமாக நடைபெறாது.

பராமரிப்பு பணிகள் நிறைவு பெற்ற பிறகு செப்டம்பர் 29-ம் தேதி முதல் வழக்கம்போல் மக்கள் இந்நிகழ்வை கண்டு ரசிக்கலாம் என ஈஷா யோக மைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆதியோகி, தியானலிங்கம், லிங்கபைரவி வளாகங்கள் எவ்வித மாற்றமும் இன்றி வழக்கம் போல் பக்தர்களின் தரிசனத்திற்காக திறந்து இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...

கோடைக்காலம்: Pothannur வழித்தடத்தில் Mangaluru-Chennai சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு Karnataka மாநிலம் Mangaluru-இல் இருந்து Chennai Egmore-க்கு Pothannur வழித்தடத்தில் சிறப்பு ரயி...

கோவை விமான நிலையம் 5.15 சதவீதம் வளர்ச்சியுடன் புதிய சாதனை படைப்பு

கோவை சர்வதேச விமான நிலையம் 2025-26 நிதியாண்டில் 5.15 சதவீதம் வளர்ச்சி பதிவு செய்துள்ளது. இந்த காலத்தில் மொத்தம் 34,20,74...

கோவை விமான நிலையம் 5.15% வளர்ச்சியுடன் புதிய சாதனை படைப்பு

கோவை சர்வதேச விமான நிலையம் 2025-26 நிதியாண்டில் 5.15% வளர்ச்சி பதிவு செய்துள்ளது. இந்த காலத்தில் மொத்தம் 34,20,745 பேர்...

கோவை: திமுக கவுன்சிலர்கள் இருவர் அதிமுகவில் இணைந்தனர்; CPI கவுன்சிலர் ராஜினாமா

கோயம்புத்தூரில் திமுகவைச் சேர்ந்த இரு மாநகராட்சி உறுப்பினர்கள் அதிமுகவில் இணைந்த நிலையில், சிபிஐ கவுன்சிலர் ஒருவர் கட்சி...

கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் கதவு உடைத்து திருட முயன்ற முகமூடி திருடர்கள் தப்பியோட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் நேற்று மாலை 7 மணியளவில் நாச்சிமுத்து வீட்டின் முன்பக...