தொடரும் நூதன வழிப்பறி: மக்களே உஷார்..!

கோவையில் கடந்த சில மாதங்களாக வீடு புகுந்து கொள்ளையடிக்கும் சம்பம் அதிகரித்துள்ளது. குழந்தைகளுக்கு கோடை விடுமுறை என்பதால் பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் வெளியூர் சென்று விடுகின்றனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சில மர்ம நபர்கள் பூட்டிய கதவை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்று வருகின்றனர்.

இதனை தடுக்க கோவை மாநகர காவல்துறை சார்பில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு இரவு நேரங்களில் போலீசார் ரோந்து சென்றுவருகின்றனர். இந்த நிலையில், யாரும் இல்லாத சாலையில் வரும் வயதானவர்களை ஏமாற்றி நகைகளை கொள்ளையடிக்கும் கும்பல் கோவையை சுற்றி வருகிறது. 

சாலையில் நடந்து செல்லும் முதியவர்கள் மற்றும் பெண்களிடம் தங்களை காவல்துறையினர் அல்லது சமூக சேவகர் என்று காட்டிகொள்ளும் மர்ம கும்பல், சம்பந்தப்பட்ட பகுதியில் அதிக அளவில் திருட்டு நடைபெறுவதாக கூறி, அணிந்திருக்கும் நகைகளை பைக்குள் வைக்க அறிவுறுத்துகிறது. 

இதை நம்பி பொதுமக்கள் தங்கள் ஆபரணங்களை ஒவ்வொன்றாக கழட்டி கொடுக்க அதை ஒரு காகிதத்தில் மடிப்பது போல மடித்து கொடுக்கிறது அந்த மர்ம கும்பல். பின்னர், வீடு திரும்பி மடித்த காகிதத்தை திறந்து பார்க்கையில் அதில் வெறும் கற்கள் தான் கிடைக்கின்றன. இந்த நூதன கொள்ளையில் பெரும்பாலும் பெண்களே அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். 

இந்த சம்பவம் நேற்று முன்தினம் கிணற்றுக்கடவு பகுதியில் அரங்கேறியுள்ளது. கிணத்துக்கடவு தேர் வீதியை சேர்ந்தவர் சந்திரா (80). ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியையான இவர் வங்கிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் வழியில் வழிமறித்த இரு மர்ம நபர்கள், இது கொள்ளையர்கள் நடமாடும் பகுதி எனக்கூறியுள்ளனர். தொடர்ந்து, நகைகளை கழட்டி கொடுத்தால் காதிகத்தில் மடித்து கொடுப்பதாக கூறிய அந்த நபர்களை நம்பிய சந்திரா தனது 7 பவுன் நகைகளை கழட்டி கொடுத்தார். அவர்களும் அதனை மடிப்பதுபோல் காகிதத்தை மடித்து சந்திராவிடம் கொடுத்துள்ளனர். அவர்கள் மடித்து கொடுத்த காகிதத்தோடு வீடு திரும்பிய சந்திரா அதில் நகைகள் இல்லாததால் அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர் கிணத்துக்கடவு போலீசாரிடம் புகார் அளித்ததன் பேரில் வழக்கு பதிந்த போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். 

போலீசார் பாதுகாப்பு இருந்த போதிலும் தொடர்ந்து, இது போன்ற கைவரிசையை காட்டிவரும் கும்பலிடம் இருந்து தங்களை காத்துக்கொள்ள வேண்டியது அவரவரின் தலையாய பொறுப்பு. எனவே மக்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். 

சொல்லுறதை சொல்லிட்டோம், உஷார்...!

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...