ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் 22-வது liveSurge பயிலரங்கம்: சர்வதேச மருத்துவ நிபுணர்கள் பங்கேற்பு

கோவையில் ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் கார்டியோதோராசிக் துறை சார்பில் 22-வது liveSurge வருடாந்திர பயிலரங்கம் நடைபெற்றது. ஜெர்மனி, இத்தாலி, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளின் மருத்துவ நிபுணர்கள் பங்கேற்றனர்.


கோவை: கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் கார்டியோதோராசிக் அறுவை சிகிச்சைத் துறை சார்பில் 22-வது liveSurge வருடாந்திர பயிலரங்கம் இன்று துவங்கியது.



இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த பயிலரங்கின் முதல் நாளில், ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் முதன்மை செயல் அதிகாரி டாக்டர் ரகுபதி வேலுசாமி, கார்டியோதோராசிக் அறுவை சிகிச்சைத் துறையின் முன்னாள் துறைத்தலைவர் டாக்டர் முரளிதரன், கார்டியோதோராசிக் அறுவை சிகிச்சைத் துறை சேர்மன் டாக்டர் சந்திரசேகர், ஜி.கே.என்.எம் மருத்துவமனை மருத்துவர்கள், இந்தியாவின் பிற மாநிலங்கள், மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த மருத்துவர்கள் என நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.



இந்த பயிலரங்கில் ஜெர்மனி, இத்தாலி, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள், பல்வேறு அமர்வுகளில் இருதய அறுவை சிகிச்சை சம்பந்தமான தகவல்களை காணொளி காட்சிகள் மூலம் விளக்கியதோடு தங்களது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.



இருதய அறுவை சிகிச்சை துறையில் நிகழ்ந்துவரும் தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் புதிய நடைமுறைகள் குறித்தான தகவல்கள் வழங்கப்பட்டன.



ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் முதன்மை செயல் அதிகாரி டாக்டர் ரகுபதி வேலுசாமி கூறுகையில், "22-வது liveSurge பயிலரங்கம் கார்டியோதோராசிக் துறையில் உள்ள முக்கிய தலைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது. இந்த பயிலரங்கம் பங்கேற்பாளர்களுக்கு தேவையான தகவல்களை வழங்கும்" என்றார். மேலும், ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் கார்டியோதோராசிக் துறை பல்வேறு மேம்பட்ட தொழில்நுட்பங்களை கொண்டுள்ளதாகவும், ஆண்டொன்றுக்கு 1800 ஓபன் ஹார்ட் அறுவை சிகிச்சைகள் செய்யப்படுவதாகவும் கூறினார்.



இந்த பயிலரங்கமானது பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்களை ஒன்றினைத்ததோடு, பங்கேற்பாளர்கள் தங்கள் சொந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும், மற்றவர்களுடன் கருத்துக்களை பரிமாறிக் கொள்ளவும் சிறந்த வாய்ப்பாக அமைந்தது. கார்டியோதோராசிக் அறுவை சிகிச்சை துறையில் தற்போதைய நிலையைப் புரிந்துகொள்ளவும், எதிர்காலத்தில் நிகழக்கூடிய மாற்றங்களுக்கு தயாராகவும் பங்கேற்பாளர்களுக்கு இந்த பயிலரங்கம் பெரிதும் உதவியது.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...