பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட நெறையூர் கிராம மக்கள் 2026 சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம், குண்டடம் ஒன்றியத்திற்குட்பட்ட சடையாபாளையம் பஞ்சாயத்தின் எல்லைக்குள் உள்ள நெறையூர் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.



பல ஆண்டுகளாக கிராமத்தில் குடிநீர் வசதி, தண்ணீர் சேமிப்பு தொட்டி, சாலை வசதி, போக்குவரத்து வசதி, இடுகாடு வசதி மற்றும் நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை தேவைகள் எதுவும் செய்யப்படவில்லை என கிராம மக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.



குடிநீர் வசதி இல்லாததால், 20 லிட்டர் கேன்களில் தண்ணீர் வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இது கூடுதல் பொருளாதார சுமையை ஏற்படுத்தி வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த பிரச்சினைகள் குறித்து பலமுறை அரசு அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடம் மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் கூட வழங்கப்படவில்லை என்றும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.

இதனால் விரக்தியடைந்த கிராம மக்கள், வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்து, “அடிப்படை வசதிகள் இல்லையெனில் தேர்தல் வேண்டாம்” எனக் கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“எங்கள் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தால்தான் இயல்பான வாழ்க்கை நடத்த முடியும். தற்போது மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள நெறையூர் கிராமத்தை காப்பாற்ற அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

Teen Girl Dies After Family of Three Consumes Pesticide Near Perur in Coimbatore

In a tragic incident, a family of three allegedly consumed pesticide at their residence in Arumugagoundanur near Perur,...

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...