சேலம் கோட்டத்தில் ரயில் பயணச்சீட்டு இல்லாமல் பயணித்தவர்களிடம் ரூ.1.67 கோடி அபராதம் வசூல்

சேலம் ரயில்வே கோட்டத்தில் செப்டம்பர் மாதத்தில் பயணச்சீட்டு இல்லாமல் பயணித்தவர்கள், முறையற்ற பயணிகள் மற்றும் பதிவு செய்யாமல் சரக்குகளை கொண்டு சென்றவர்களிடம் இருந்து ரூ.1.67 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.


சேலம் ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட ரயில் நிலையங்களில் பயணச்சீட்டு இல்லாமல் பயணித்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக செப்டம்பர் மாதத்தில் ரூ.1.67 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சேலம் ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட சேலம், ஈரோடு, கோவை உள்ளிட்ட நிலையங்களில் பயணச்சீட்டு இல்லாமல் ரயிலில் பயணிப்பவர்கள், முறையற்ற வகையில் பயணிப்பவர்கள், பதிவு செய்யாமல் சரக்குகளை ரயிலில் கொண்டு செல்பவர்களை கண்டறிந்து ரயில்வே பரிசோதனை அதிகாரிகளால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் பயணச்சீட்டு இல்லாமல் பயணித்த 13,553 பேரிடமிருந்து ரூ.1,01,87,158 அபராதமாக வசூலிக்கப்பட்டது. ரயில்களில் முறையற்ற பயணம் மேற்கொண்டதாக 14,590 பேரிடமிருந்து ரூ.64,81,870 வசூலிக்கப்பட்டது. மேலும், ரயிலில் பதிவு செய்யாமல் சரக்குகளை கொண்டு சென்றதாக 58 பேரிடமிருந்து ரூ.44,026 அபராதமாக வசூலிக்கப்பட்டது.

மொத்தமாக ரூ.1,67,13,054 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை மூலம் ரயில்வே துறையின் வருவாய் இழப்பை தடுக்க முடியும் என்றும், பயணிகள் முறையான பயணச்சீட்டு பெற்று பயணிக்க வேண்டும் என்றும் ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Newsletter

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...