மரங்களை காப்பாற்றவும், நீர் சேமிப்பு குறித்தும் கோவையில் பசுமை மாரத்தான் போட்டி!

முன்னாள் தேசிய படை மாணவர்கள் மற்றும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் இணைந்து பசுமை மாரத்தான் போட்டியை நடத்தினர். மரங்களை காப்பாற்றவும், நீர் சேமிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இப்போட்டி நடைபெற்றது. கோவை பந்தய சாலையில் இன்று காலை 6 மணியளவில் நடைபெற்ற மாரத்தான் போட்டியினை பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கொடியசைத்து துவங்கி வைத்தார். 



பசுமை மாரத்தான் போட்டி ஆண்கள் மற்றும் பெண்கள் என இரண்டு பிரிவுகளாக தனித் தனியாக நடைப்பயிற்சி மற்றும் ஓட்டப் போட்டிகள் நடைபெற்றது. இதில் 13 வயதிற்குட்பட்டோருக்கும், 13 வயதிற்கு மேற்பட்டோருக்கு 5 கிலோ மீட்டர் என போட்டிகள் இரு பிரிவில் நடைபெற்றது. இப்போட்டியில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றோருக்கு முதல் பரிசாக ரூபாய் 5000, இரண்டாம் பரிசாக ரூபாய் 2000 மற்றும் மூன்றாம் பரிசாக ரூபாய் 1000 வழங்கப்பட்டது. போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் மற்றும் பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டது.



இதில், பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், சிறப்பு விருந்தினர்கள் தமிழ்மகன், அசோக்குமார், நிர்வாஸ், பிரகாஷ், ஆனந்த், சுதன் மற்றும் முன்னாள் தேசிய படை மாணவர்கள் மற்றும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.





Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...