சகோதரத்துவக் கோப்பைக்கான கால்பந்து மற்றும் கைப்பந்து போட்டிகளில் கோவை மற்றும் தஞ்சாவூர் அணிகள் வெற்றி!


இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO)-வின் விளையாட்டு பிரிவான டிராக் போர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் (TFSC) சார்பாக கோவையில் 'சகோதரத்துவக் கோப்பை 2017' எனும் தலைப்பில் மாபெரும் கால்பந்து மற்றும் கைப்பந்து  போட்டிகள் மே 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் குனியமுத்தூர் நூர்சேட் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்த நிகழ்வின் சிறப்புவிருந்தினராக கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர் லட்சுமி கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். 



பின்னர், நிகழ்ச்சியில் அவர் பேசுகையில்; 'சகோதரத்துவக் கோப்பை 2017' என்னும் இந்த விளையாட்டின் மூலம் அனைவரும் தங்களது முழு திறமையை வெளிப்படுத்தினர். விளையாட்டின் மீது உங்களுக்கு எந்த அளவு ஆர்வம் உள்ளதை போன்று உங்கள் வாழ்விலும் ஆர்வம் காட்ட வேண்டும். விளையாட்டில் உங்கள் பெற்றோர்கள் உங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார்களோ அதைவிட அவர்கள் மீது நீங்கள் அக்கறை கொள்ள வேண்டும். இந்த சகோதரத்துவ போட்டியின் மூலம் நீங்கள் அனைவரும் ஒன்றுபட்டு இருப்பது போல் வாழ்க்கையிலும் அனைவரும் இதுபோன்றே சகாதரத்துவத்துடன் இருந்து சமுதாயத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்றார்.



இதில், தமிழகம் மற்றும் கேரளாவிலிருந்து  50 அணிகள் போட்டியில் கலந்து கொண்டது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு மொத்தம் ரொக்கமாக ரூபாய் 38,000 வழங்கப்பட்டது. கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு முதல் பரிசாக ரூபாய் 10,000 கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு முதல் பரிசாக ரூபாய் 8,000 மற்றும் கோப்பைகள் சிறப்பு விருந்தினர் வழங்கினார். இரண்டாம் பரிசாக ரூபாய் 5,000. மூன்றாம் பரிசாக ரூபாய் 3,000 மற்றும் நான்காம் பரிசாக ரூபாய் 2,000 வெற்றி பெற்ற அணிகளுக்கு வழங்கப்பட்டது.



இந்நிகழ்ச்சியில், என்.எஸ் குரூப் நிறுவனத்தின் தலைவர் கமாலுதீன், நூர்சேட் மேல்நிலைப்பள்ளி செயலாளர் இம்ரான்கான், ஜாமத்தே ஹி இஸ்லாமி ஹிந்த் தலைவர் சையத் இப்ராஹிம், ஜாமத்தே ஹி இஸ்லாமி ஹிந்த் மக்கள் தொடர்பு செயலாளர் அப்துல் ஹக்கீம், தமிழக டிராக் போர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் ஒருங்கிணைப்பாளர் சுல்தான் மற்றும் டிராக் போர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் ஒருங்கிணைப்பாளர் ஷேய்க் முஹம்மது ஆகியோர் கலந்து கொண்டனர்.



Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...