வால்பாறை: கனமழையில் நியாய விலைக் கடையில் பொருட்கள் வாங்க மக்கள் அவதி

வால்பாறையில் கனமழை காரணமாக நியாய விலைக் கடையில் பொருட்கள் வாங்க மக்கள் சிரமப்படுகின்றனர். கருமலை எஸ்டேட் பகுதியில் அரசு கட்டிடத்தில் புதிய நியாய விலைக் கடை அமைக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Coimbatore: வால்பாறையில் கனமழை பெய்து வரும் நிலையில், நியாய விலைக் கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, 12வது வார்டுக்குட்பட்ட கருமலை எஸ்டேட் பகுதியில் உள்ள நியாய விலைக் கடையில் மக்கள் கொட்டும் மழையில் வெளியே நின்று பொருட்களை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

வால்பாறையில் 65க்கும் மேற்பட்ட எஸ்டேட் பகுதிகள் உள்ளன. இங்கு 70க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் நியாய விலைக் கடைகள் இயங்கி வருகின்றன. மேலும், சிந்தாமணி நியாய விலைக் கடைகளும் செயல்பட்டு வருகின்றன. பல எஸ்டேட் பகுதிகளில் எஸ்டேட் நிர்வாகத்தின் இடங்களில் நியாய விலைக் கடைகள் இயங்கி வருகின்றன. வால்பாறை, முடிஸ், சோலையார் அணை, ரொட்டிக்கடை போன்ற பகுதிகளில் அரசு கட்டிடங்களில் நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.

தற்போது வால்பாறை பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், குறிப்பாக கருமலை எஸ்டேட் பகுதியில் உள்ள நியாய விலைக் கடையில் மழைநீர் உள்ளே வடிகிறது. இதனால் உணவுப் பொருட்கள் சேதமடைகின்றன. மேலும், மக்கள் கொட்டும் மழையில் வெளியே நின்று பொருட்களை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கருமலை எஸ்டேட் பகுதியில் உள்ள நியாய விலைக் கடையை அரசு கட்டிடத்தில் அமைத்துத் தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...